வேர்ட்பிரஸ்

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்

வேர்ட்பிரஸ் ஆனது இலவசமான திறமூல நிரலையுடைய, இணையத்தளங்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு மென்பொருளாகும். வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்களது சொந்த தளத்தில் வலைப்பதிவை வைத்திருக்க விரும்பின் அதற்கான சிறப்பான மென்பொருள் இது மட்டும்தான். (ஊரோடி வலைப்பதிவும் வேர்ட்பிரஸினையே பயன்படுத்துகின்றது.)

கடந்த தை மாதத்தில் வேர்ட்பிரஸினை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்து சிறிது சிறிதாக மொழிமாற்றம் செய்து வந்தேன். இடைக்கிடையே வேர்ட்பிரஸில் ஆர்வம் உள்ள பலரும் பங்களித்து வந்தார்கள்.

ஏறத்தாள ஒரு வருடமாகிய நிலையில் இப்போது வேர்ட்பிரஸின் 3.3 தமிழப்பதிப்போடு சேர்ந்து வெளிவந்துள்ளது. நீங்களும் தமிழ்ப்பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ள http://ta-lk.wordpress.org க்கு வாருங்கள்.

நீங்களும் உங்கள் ஓய்வு நேரத்தில் மொழிமாற்றத்தில் பங்களிக்க விரும்பின் இங்கே வாருங்கள்.

28 மார்கழி, 2011

buddypress 1.5, bbpress 2.0 வெளியானது

Buddypress 1.5

buddypress என்பது வேஸ்புக் போன்ற ஒரு சமூக இணையத்தளத்தை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு இணைய மென்பொருள் ஆகும். வேர்ட்பிரஸின் ஒரு செருகியாக இருக்கும் இது நீண்டகாலமாக பதிப்பு 1.2 இலிருந்துவந்து இப்போது புதிய பதிப்பான 1.5 வௌியிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க புதிய வசதிகள்

1. வேர்ட்பிரசுடன் சிறந்த ஒத்திசைவு மற்றும் இலகுவாக நிறுவிக்கொள்ளல். (trunk பதிப்பு 1.3 இனை பயன்படுத்தியவர்களுக்கு இது புதிதல்ல)
2. புதிய வார்ப்புரு – மிக அழகானதொரு புதிய வார்ப்புரு. இப்போது இலகுவாக கிடைக்கும் படிபிரஸ் வார்ப்புருக்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சொல்லலாம்.
3. மிக இலகுாவன profile field UI.
4. மீள வடிவமைக்கப்பட்ட Activity stream.
5. Photo Gallery மற்றும் புகைப்படங்களை சுவரில் தரவேற்ற முடிதல்.

இவற்றை விட நூற்றுக்கணக்கான பிழைகளும் இப்பதிப்பில் திருத்தப்பெற்றுள்ளன.

bbPress 2.0

bbPress என்பது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு மன்றம் (forum) ஒன்றினை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு செருகி. பதிப்பு 2.0 இற்கு முன்னர் இது ஒரு செருகியாக இல்லாமல் தனித்தியங்கும் ஒரு மென்பொருளாகவே இருந்தது.

இப்பொழுது இது ஒரு செருகியாக மாற்றம் பெற்றிருப்பதால், மிக இலகுவாக வேர்ட்பிரஸுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

படிபிரஸ் மற்றும் பிபிபிரஸ் தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கு வாருங்கள்.

24 புரட்டாதி, 2011

Custom Post types என்றால் என்ன?

ask.oorodi.com ஊடாக சில நாட்களின் முன் வேர்ட்பிரஸினை ஒரு Content Management System ஆக பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் Custom Post type இனை பயன்படுத்தலாம் என பதிலளித்திருந்தேன். சிறிது விளக்கமாக இங்கே…

வேர்ட்பிரஸ் ஆனது பதிப்பு 3 இன் பின்னர் ஒரு பதிவு மென்பொருள் (blogging script) என்பதனைத்தாண்டி ஒரு சிறந்த Content Management System ஆக உருவெடுத்துள்ளது. இருந்தாலும் Joomla மற்றும் Drupal போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இது இன்னமும் குழந்தைதான். பதிப்பு மூன்றிலே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய வசதிதான் Custom Post types. இது ஏறத்தாள Drupal இல் இருக்கும் Modules போன்றது.

இவ்வசதியினை பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் எங்களுக்கு விரும்பியவாறான ஒரு பதிவு வகையினை (post type) வேர்ட்பிரஸில் உருவாக்கிக்கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் சாதாரணமாக Posts, Pages, Attachements, Revisions மற்றும் Menu போன்ற சில பதிவு வகைகளை கொண்டிருக்கும். இவற்றை நீங்கள் உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலில் சாதாரணமாக கண்டுகொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் வேர்ட்பிரஸினை பயன்படுத்தி ஒரு விபரக்கொத்தொன்றை உருவாக்க திட்டமிட்டால் உங்களால் அப்பெயரில் ஒரு Post type இனை உருவாக்கி கொள்ள முடியும்.

அதன்மூலம் நீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தின் விபரங்களை பதிவுசெய்கின்றீர்கள் என கொண்டால், அவ்விபரங்களை Post என்பதூடாக பதியாது Directory என்பதனை பயன்படுத்தி பதிந்து கொள்ளலாம். இதிலுள்ள வசதி என்னவெனில் நீங்கள் அந்த Directoryக்கு தேவையானவாறு உள்ளீடு பெட்டிகளை (input fields) உருவாக்கிக்கொள்ள முடிவதுதான். கீழே சாதாரணமான ஒரு Post இற்கும் Directory க்கும் இருக்கின்ற வித்தியாசத்தை பாருங்கள்.


இந்த Custom Post type இனை உருவாக்க நாங்கள் எங்களது function.php கோப்பில் சில வரிகளை எழுதிக்கொள்ளுதல் வேண்டும். அத்தோடு இவற்றின் மூலம் சேமிக்கப்படும் தரவுகளை தளத்தில் வௌிக்காட்டவும் எங்கள் வார்ப்புருவில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு நாங்களாகவே செய்யலாம் என்று பிறிதொரு பதிவில் பார்ப்போம். இப்போது அதற்கு உதவக்கூடிய இரண்டு கருவிகளை பார்ப்போம்.

1. WordPress Custom Post Type Code Generator
இக்கருவியை பயன்படுத்துவதன்மூலம் நாங்கள் எழுதிக்கொள்ள வேண்டும் என்று சொன்ன Coding இனை உருவாக்கிக்கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் வார்ப்புருவில் செய்யவேண்டிய மாற்றங்களை நீங்களாகத்தான் செய்துகொள்ள வேண்டும்.

2. Custom Post Type UI – plugin
இவ்விலவச செருகியை உங்கள் தளத்தில் நிறுவிக்கொண்டாலும் நீங்கள் அதனைப்பயன்படுத்தி இலகுவாக Custom Post type களை உருவாக்கிக்கொள்ளலாம். இங்கும் வார்ப்புருவில் நீங்களாகத்தான் மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.


இந்த Custom Post type வேர்ட்பிரஸில் ஒரு சிறப்பான வசதியாக இருந்தாலும் இதில் பல குறைபாடுகள் உண்டு. ஒரு சாதாரண பயனாளருக்கு ஒரு சாதாரண சிறிய தேவைகளுக்கு இவையேதும் கண்ணிற்கு தெரியாவிட்டாலும், இவற்றில் மேம்படுவதற்கான இடங்கள் நிறையவே உள்ளன. இதனால் இதனை கைவிட்டு வேறு முறைகளை கையாள்பவர்களும் உண்டு. அம்முறைகளில் சிறப்பானது Podscms plugin. இச்செருகி மிகவும் வித்தியாசமான முறையில் Custom Post type இற்கு சமமான பதிவு வகைகளை உருவாக்கி தரவல்லது. இங்கும் நீங்கள் தரவுகளை வௌிக்காட்ட வார்ப்புருக்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் முகவரிகளை பாருங்கள்:
1. http://codex.wordpress.org/Post_Types
2. http://podscms.org/codex/
3. http://justintadlock.com/archives/2010/04/29/custom-post-types-in-wordpress

6 ஆவணி, 2011