வேர்ட்பிரஸ்

வித்தியாசமான செய்தியோடை வடிவங்கள் (RSS buttons).

இதில நான் என்னத்தை சொல்ல. வழமையை விட வித்தியாசமா இவை அமைஞ்சிருக்கு. நீங்க உங்கட பதிவில இவற்றை பயன்படுத்திறதெண்டாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் காப்புரிமை விலக்கப்பட்டவை.


9 ஆவணி, 2008

வேர்ட்பிரஸில் பக்க எண்கள்.

வேர்ட்பிரஸில் இருக்கின்ற குறைபாடுகளில் ஒன்று இலகுவாக பதிவுகளுடாக பயணிக்க முடியாதிருப்பதாகும். அனேகமான CMS களில் இருப்பது போல பக்க எண்கள் இருந்தால் இக்குறைபாட்டினை தீர்க்கமுடியும் என பலமுறை எண்ணியிருக்கிறேன்.

இப்பொழுது அதற்கு ஒரு சரியான plugin கிடைத்திருக்கிறது. இங்கு சென்று தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். கீழே காட்டப்பட்டது போன்ற உங்கள் பதிவிலும் பக்க எண்களை பெற்று கொள்ளலாம்

13 ஆனி, 2008

பாகம் 6 – நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்

வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்குதல்

வேர்ட்பிரஸின் முக்கிய வசதிகளில் ஒன்று அடைப்பலகைகள். நீங்கள் அடைப்பலகையை வடிவமைக்கும் விதத்திலேயே உங்கள் வலைப்பதிவை ஒரு முழு அளவிலான இணையத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு இலவசமாகவே ஏராளமான அடைப்பலகைகள் உங்களால் இணையத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.

நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் அடைப்பலகை அடிப்படையாக index.php என்கின்ற கோப்பையும் style.css என்கின்ற கோப்பையும் கொண்டிருக்கும். மேலும் இது பற்றி அறிய பாகம் ஐந்தினை பாருங்கள்.

ஆனால் இவ்விரண்டு கோப்புகளை மட்டும் கொண்டு ஒரு சிறந்த அடைப்பலகையை உருவாக்கி விட முடியாது. ஒரு சாதாரண அடைப்பலகை,

 • index.php
 • style.css
 • single.php
 • page.php
 • archive.php
 • category.php
 • comment.php
 • comment_popup.php
 • search.php
 • footer.php
 • header.php
 • sidebar.php

கோப்புகளை கொண்டிருக்கும். இந்த கோப்புகள் ஒரு அடைப்பலகையை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதை கீழே காட்டப்பட்டிருக்கின்ற வரிப்படம் மூலம் இலகுவாக காட்டலாம்.

இங்கே single.php கோப்பு ஒரு தனிப்பதிவை காட்டுவதற்குரிய கோப்பாகும்.
page.php என்பது ஒரு பக்கத்தை காட்டுவதற்குரிய கோப்பாகும்.
archive.php என்பது archive களை காட்டுவதற்குரிய கோப்பாகும்.

வேர்ட்பிரஸ் முகப்பு.
வேர்ட்பிரஸின் முகப்பு மற்றும் ஒவ்வொரு பக்கமும் கீழே காட்டப்பட்டவாறு அடைப்பலகை மூலம் கட்டமைக்கப்படுகின்றன.

வேர்ட்பிரஸின் அடைப்பலகை என்பது சாதாரணமாக ஒரு XHTML பக்கத்தை உருவாக்கத்தெரிந்தவருக்கு மிக இலகுவான ஒரு விடயமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் dynamic ஆக மாறுபடுகின்ற அல்லது தரவுத்தளத்தில் இருந்து பெற்ப்படப்போகின்ற விடயங்களை காட்டுவதற்கா நாங்கள் சில php வரிகளை ஆங்காங்கு சேர்க்கப்போகின்றோம். அவ்வளவுதான். இதனை விளங்கிக்கொள்ள நாங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலோடு வருகின்ற default அடைப்பலகையினை பயன்படுத்திக்கொள்ள போகின்றோம்.

இதற்கு முன்னர் நீங்கள் இந்த WPCandy இணையத்தின், கீழே தரப்பட்டுள்ள உதவிப்பக்கத்தை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் கூறப்பட்டுள்ளவற்றை விளங்கிக்கொள்ள முயற்சியுங்கள். அடுத்தபாகத்தில் அது தொடர்பாக பார்ப்போம்.

[download#5#image]

10 ஆனி, 2008