அடொபி

GoLive இனை நிறுத்தியது அடொப்

அடொப்நிறுவனம் தனது இணைய வடிவமைப்பு மென்பொருளான Adobe GoLive இன் மேம்பாட்டினையும் விற்பனையையும் 28.04.2008 இல் இருந்து பூரணமாக நிறுத்தியுள்ளது. தனது Adobe Dreamweaver மென்பொருளில் பூரண கவனத்தினை செலுத்துவதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு GoLive பயனாளர்கள் Dreamweaver இற்கு மாறிக்கொள்ளுவதற்கு சலுகை விலையில் அம்மென்பொருளை வழங்கவும் முன்வந்துள்ளது.



அடொப் நிறுவனம் மக்ரோமீடியா நிறுவனத்தை வாங்க முன்னர், GoLive மட்டுமே அவர்களது இணைய வடிவமைப்பு மென்பொருளாக இருந்தது.

16 வைகாசி, 2008

Tool Tip component for Flash

நீங்க ஒரு பிளாஸ் பாவனையாளரா இருந்தா உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பிளாஸ் வடிவமைப்புகளில ஒரு Tool tip ஐ இலகுவாக சேர்க்க பயனுள்ளதாக இருக்கும்.




கீழ சொடுக்கி தரவிறக்குங்கோ. அப்படியே ஒரு பின்னூட்டமும். எப்படி பாவிக்கிறது எண்டு தெரியாட்டா கேளுங்கோ.

[download#7#image]

23 மாசி, 2008

நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial

நான் இணையத்தை சுத்திவரேக்க இந்த Tutorial கண்ணில பட்டுது. ஒரு புதிய மனித உருவத்தை போட்டோ சொப்பில் உருவாக்க நானும் எவ்வளவோ வழிகளை பார்த்திருக்கிறன். ஆனா இந்த வழிமுறைபோல இலகுவான ஒரு முறையை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் கீழே காட்டியிருக்கிற படத்தை உருவாக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலந்தான் எடுத்துது. ஒரு நல்ல போட்டோசொப் பயனாளருக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை. இன்னும் கொஞ்சநேரம் செலவழித்திருந்தால் தலைமயிரைக்கூட மாற்றியிருக்க முடியும்.

சரி இங்க சொடுக்கி தொடங்குங்க வேலையை.

18 மாசி, 2008