நிழற்படம்

திருக்கேதீஸ்வரம் – புகைப்படங்களாய்

தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுள் இரண்டு இவ்விலங்கையில் உள்ளன. அவைகளில் ஒன்றாகிய திருகோணமலைக்குச் சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிக மொன்றிருக்கின்றது. மற்றொன்றாகிய திருக்கேதீச்சுரத்துக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன. இத் திருக்கேதீச்சுரம் இவ்வடமாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்கு அதிசமீபத்திலிருக்கின்ற மாதோட்த்தினுள்ளது. இத் திருக்கேதீச்சுரம் அழிந்து காடாகக்கிடக்கின்றதே! புதிது புதிதாக இவ்விலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகின்றனவே! நீங்கள் இந்த மகா ஸ்தலத்தைச் சிறிதும் நினையாததென்னையோ! இவ்விலங்கையிலுள்ள விபூதிதாரிகள் எல்லோருஞ் சிறிது சிறிது உபகரிக்கினும் எத்துணைப்பெருந்தொகைப்பொருள் சேர்ந்துவிடும்! இதை நீங்கள் எல்லீருஞ் சிந்தித்து இத் திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின், அருட்கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வர். – திருச்சிற்றம்பலம்

என்கின்ற ஆறுமுக நாவலர் பெருமானின் வேண்டுகை சைவ மக்களை எழுச்சிபெறச் செய்து, போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, இரண்டாயிர்த்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேலான பழமைவாயந்த திருக்கேதீஸ்வரம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மீள அமைக்கப்பெற்றது. இவ்வாலயத்தின் தற்போதய புகைப்படங்கள்.

7 வைகாசி, 2012

புகைப்படங்களாய் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணக்குடாநாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மிகப்பலம்வாய்ந்த அரசொன்றினை கொண்டிருந்த இது, இதன் மிகப்பலமான காலகட்டத்தில் இந்தியாவின் இராமேஸ்வரம் தொடக்கம் புத்தளம் வரையிலாக பரந்து விரிந்த அரசொன்றினை கொண்டிருந்து. இன்று வீதிகள் தோறும் நிறைந்திருக்கும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் அதன் பெருமையை விளப்ப வல்லன.

சிறியதும் பெரியதுமாய் ஏறத்தாள மூன்றாயிரம் இந்து ஆலயங்களும் குறைவிலாத கிறீத்தவ தேவாலயங்களும் இன்றும் நிமிர்ந்து நின்று யாழ்ப்பாணத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பன.. கீழே யாழ்ப்பாணத்தை சூழ நான் எடுத்த புகைப்படங்களில் சில

இலகு கருதி படங்களை சிறிதாக்கி பதிவிட்டுள்ளேன். ஏதாவது காரணத்திற்காக பெரிய படம் தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

மிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.

ஆதவன் மறையும் மாலைநேரத்தின் அழகிய பொழுது, அனலைதீவின் கடற்கரையில்..

யாழ்ப்பாணத்திலும் அருகி வரும் திருக்கை மாட்டு வண்டில்கள்.

தமிழும் சைவமும் தந்த நல்லைநகர் ஆறுமுக நாவலர் வீட்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் சுவர்

யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள்

மாலை நேரம் மதிமயங்கும் வேளை

சித்தன்கேணி சிவாலயத்தின் பூங்காவனத்திற்கு அணிசேர்க்கும் அழகிய மயில்.

நிறைந்த அமைதியாய், பறாளாயிலுள்ள தீர்த்தக்கேணி

பனைமரங்கள் மட்டுமல்ல பரந்து விரிந்திருக்கும் பெருமரங்களும்தான் – இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சூழல்

ஆனந்த நடமிடும் நடராஜப்பெருமான் – உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலயம்

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அழகிய தீவுகள் – எழுவைதீவு

யாழ்ப்பாணத்தை சூழ பரந்து விரிந்திருக்கும் நீலக்கடல்

யாழப்பாண அரசை இன்னமும் நினைவுறுத்த நிமிர்ந்து நிற்கும் மந்திரிமனை

காடுகளாகும் குடிமனைகள்

புனருத்தாரணம் செய்யப்பட்ட வேலணை முத்துமாரி அம்மன் ஆலயம்

அளவெட்டி பெருமாக்கடவையில் பரந்து விரிந்திருக்கும் வயல்வெளி

யாழ்ப்பாணத்தில் இன்னமும் சில இடங்களில் காணக்கூடிய கல்வேலிகள்

அமைதியாய் நிமிர்ந்து நிற்கும் பண்டைய கலங்கரை விளக்கு களில் ஒன்று.

31 ஐப்பசி, 2010

வல்லிபுரத்தாழ்வார் – யாழ்ப்பாணம்

சிங்கை என்று யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பருத்தித்துறைப்பிரதேசத்தில் அலைகடலின் அருகே குடிகொண்டிருக்கின்ற வல்லிபுரத்தாழ்வார் திருத்தலத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று எட்டாம் திருவிழாவிற்கு போகின்ற பாக்கியம் கிட்டியது. அதிகாலையில் சென்றமையினால் சில புகைப்படங்ளை எடுக்க முடிந்நது.




6 ஐப்பசி, 2008