கணினி

கணினி தொடர்பான பதிவுகள்

என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.

எல்லாரும் தொடர் விளையாட்டு எண்டு தொடங்குகினம். நானும் என்ர பங்குக்கு எனக்கு தெரிஞ்சதை தொடர் விளையாட்டாக்கி இருக்கு. நீங்கள் தினமும் அல்லது அதிகமாக பயன்படுத்துகின்ற மென்பொருள்களை சிறு விளக்கங்களோடு பட்டடியல் இட வேண்டும். அவ்வளவுதான்.

சில நாட்களுக்கு முன்னர் தொடர்விளையாட்டாக இருந்த ABCD… பலருக்கும் மிகவும் பயன்பட்டது போல இத்தொடர்பதிவும் பலருக்கும் பயன்படும்.

சரி கீழ என்ர தொகுப்பு.. (அனேகமானவை பலரும் பயன்படுத்துவதுதான்)

Adobe Flash CS 3

இதுக்கு பெரிசா அறிமுகம் தேவையில்லை. மக்ரோமீடியா நிறுவனத்திடம் இருந்த இந்த மென்பொருளை வாங்கி இப்போது அடொபி நிறுவனம் மேம்படுத்தி வருகின்றது. மிக அண்மையில் இதன் CS4 பதிப்பு வெளிவந்திருக்கின்றது. அக்சன்ஸ்கிரிப்ற் மொழியின் மிகவும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 3.0 உடன் வெளிவந்த இந்த மென்பொருள் எனது கணினியில் என்னேரமும் திறந்திருக்கும் மென்பொருள்களில் ஒன்று. மிக இலகுவாக அசையும் படங்களை உருவாக்கவும், இணையம் சார் மென்பொருள்களை உருவாக்கவும் இம்மென்பொருள் பயன்படும். இப்பொழுது பிரபலம் பெற்று வரும் AIR இல் இயங்கக்கூடிய பிளாஸ் மென்பொருள்களை உருவாக்கவும் இது பயன்படும்.

Adobe Photoshop CS4

இதுக்கு அறிமுகமே தேவையில்லை. அனேகமாக அனைவரும் பயன்படுத்து மென்பொருள்களில் ஒன்று. மிக அண்மையில் தான் CS4 பதிப்புக்கு மேம்படுத்தியிருந்தேன். முன்னைய பதிப்பினை விட வேகம் அதிகமாகவும், பயனாளர் முகப்பு சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. முப்பரிமாண படங்களை கையாள்வதில் மேலதிக வசதிகளை கொண்டிருப்பது இன்னமும் சிறப்பான விடயம். (ஆனா எனக்குத்தான் முப்பரிமாண படங்களை உருவாக்க தெரியாது.)

Adobe Flex Builder

இது நான் தினமும் பயன்படுத்தும் மென்பொருள் என்று சொல்லுவதற்கில்லை. இருந்தாலும் எனது கணினியில் இருக்கும் முக்கியமான ஒரு மென்பொருள். Action Script மொழியினை பயன்படுத்தி இணைய மென்பொருள்களை உருவாக்க Adobe Flash இனை விட இது இலகுவாக பயன்படும். இம்மென்பொருளும் மக்ரோமீடியா நிறுவனத்தில் இருந்து அடொபி நிறுவனத்தை அடைந்த மென்பொருளில் ஒன்று.

CSS Edit

இந்த மென்பொருளை நான் காணும் வரை CSS மொழிக்கென்று தனியாக எதற்கு ஒரு மென்பொருள் என்று எண்ணியிருந்தேன். வழமையாக பயன்படுத்துகின்ற Notepad இனையோ அல்லது வேறு ஏதாவது மென்பொருளையோ பயன்படுத்திவிடலாம் என்பதுதான் என் எண்ணம். அது போலதான் பயன்படுத்தியும் வந்தேன். ஆனால் இந்த மென்பொருள் ஏறத்தாள எனது வேலையை கால் பங்காக குறைக்கிறது எனலாம். துரதிஸ்டவசமாக இதற்கு வின்டோஸ் பதிப்பு இல்லை.

TextMate

நீண்ட காலமாக Adobe Dreamwever பிடித்து வைத்திருந்த இடத்தை இலகுவாக கைப்பற்றிக்கொண்ட ஒரு மென்பொருள். இலகுவாக பிழையின்றி நிரல்களை தட்டச்சிடவும், நிரல் துண்டுகளை சேமித்து ஒழுங்கு படுத்தி வைக்கவும் இம்மென்பொருள் பயன்படும். சாதாரண Text editor போலவே தென்பட்டாலும், ஒரு இணைய வடிவமைப்பாளனுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

Vuze

மிக அண்மையில் நான்கைந்து நாட்களுக்கு முன்னர் பதிப்பு நான்கிற்கு மேம்படுத்தப்பட்ட இந்த மென்பொருள்தான் எனது torrent client மற்றும் படம் பார்க்கும் இடம். இலவசமாக படங்களை தரவிறக்கிக்கொள்ளவும், torrent களை தேடவும், தரவிறக்கவும் பயன்படும் மிகப்பிரபலமான இலவச மென்பொருள். Azureuz என்ற பெயரில் அறிமுகமாகிய இந்த மென்பொருள் Zudow என்று பெயர் மாற்றம் பெற்று பின்னர் Vuze என்று பெயர் பெற்றது. பதிப்பு நான்கில் வந்திருக்கும் முக்கிய மூன்று வசதிகளாக அந்த நிறுவனம் குறிப்பிட்டிருப்பன கீழே..

Completely redesigned interface. Vuze is now the easiest way to Find, Download and Play high quality & HD content.
Search for anything you want: Videos, Games and Music
Download in 1-Click
Play it back seamlessly

You can now subscribe to your favorite series or publishers, and have their content sent to you automatically.

Improved Vuze HD Network with loads of free, high-quality HD content.

NetNewsFire

டயல்அப் இணைப்போட இருக்கிற எனக்கு அனேகமான பதிவுகளை வாசிக்க உதவியா இருக்கிறது இந்த மென்பொருள்தான். இதுதான் என்ர RSS reader. மிக இலகுவாக பதிவுகளை ஒழுங்கு படுத்தி வைக்கவும் இலகுவாக நேரம் கிடைக்கிற நேரங்களில் வாசிக்கவும் இந்த மென்பொருள் உதவும். (இதால தான் ஒருத்தருக்கும் பெரிசா பின்னூட்டம் போட முடியிறதில்லை)


iTunes

இதைப்பற்றி சொல்லவே வேணாம். பாடல்கள், படங்கள் மற்றும் பொட்காஸ்ட்களை ஒழுங்கு படுத்தி வைக்கவும் கேக்கவும் பயன்படும் அப்பிள் நிறுவனத்தின் மென்பொருள். மிக அண்மையில் பதிப்பு 8 வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளை இதுவரை பயன்படுத்தாதவர்கள் நிச்சயம் பயன்படுத்தி பார்க்க வேண்டும். நல்ல இணைய இணைப்பு இருந்தால் இணைய வானொலிகளை கேட்கவும் இது சிறந்த மென்பொருள். இவற்றை விட சிறப்பான விடயம் என்னவெனில் iTunes store ஊடாக பாட்டுகள், படங்கள், தொலைக்காட்சி தொடர்களை குறைந்த விலையில் வாங்க முடிவதுடன், இலவச பொட்காஸ்ட்களை தரவிறக்கி கொள்ளவும் முடியும்.

Transmit

கோப்புகளை தரவேற்ற உதவும் மென்பொருள். நீண்ட காலமாக FileZilla இனை பயன்படுத்தி வந்தாலும் இந்த மென்பொருள் அறிமுகமான பின்னர் இதுவே எனது பிரதான தரவேற்று மென்பொருளாகி விட்டது, மிக இலகுவான பயனாளர் முகப்பு மற்றும் கோப்புகளை தரவேற்றும் வேகம் என்பன இதன் சிறப்பம்சங்களாகும்.

XAMPP

கடைசியாக எழுதினாலும் எனகு கணினியில் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் இது மட்டும்தான். உங்கள் கணினியையே வழங்கியாக மாற்றுவதன் மூலம் PHP கோப்புகளை இயக்கிப்பார்க்க முடிவதால் இயங்கு இணைய தளங்களை (dynamic websites) வடிவமைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் ஆகும்.

இணைய உலாவிகள்.

இணையத்தை சுத்திப்பாக்க. நான் Safari, Firefox இரண்டையும் பயன்படுத்துவேன்.


இதன் தொடர்ச்சியா நான் கூப்பிடுறது

1. விவசாயி இளா – திரட்டி எல்லாம் வச்சிருக்கிறார். கட்டாயம் நல்ல மென்பொருள்களும் இருக்கும் – எழுதியவியள் தானே??
2. குசும்பன் – உங்கட சினிமா தொடர்பதிவை வாசிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதால இதுக்கு கூப்பிடிறன்… கட்டாயம் எழுத வேணும்.
3. இறக்குவானை நிர்ஷன் – சினிமா பற்றியே தெரியாத என்னை சினிமா பதிவுக்கு கோத்து விட்டதுக்கு…
4. ரவிசங்கர் – கனகாலமா பதிவொண்டையும் காணேல்ல – தயவு செய்து இதை எழுதி பதிவெழுதா விரதத்தை முடிச்சு வையுங்கோ…
5. மாயா உங்களையும் கூப்பிட்டாச்சு.

பதிவிற்கு பிறகு உங்களுக்கு பிடிச்ச (அல்லது பிடிக்காத) மூன்று அல்லது நான்கு பேரை இத்தொடர்பதிவை தொடர அழைக்கவும் நன்றி.

21 ஐப்பசி, 2008

wattOS – புதிய லினக்ஸ்

உபுந்து லினிக்ஸ் இனை அடிப்படையாக கொண்டு ஒரு பாரமற்ற புதிய லினிக்ஸ் வெளியீடாக wattOS வெளிவந்திருக்கின்றது. இதனால் மிகப்பழைய கணினி ஒன்றில் கூட இந்த இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதன் இலகுத்தன்மையை அதிகமாக்குவதற்காக இதில் உபுந்துவில் வருகின்ற சில மென்பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓப்பின் ஒவ்வீஸ் இற்கு பதிலாக அபி வேரட் சேர்க்கப்பட்டிருக்கின்றது.




இப்பொழுது அல்பா அளவில் இருக்கும் இந்த இயங்குதளம் நான்குவிதமான பதிப்பில் வந்திருக்கின்றது.

wattOS – The core desktop system using a fully featured Gnome desktop

mWattOS – Milliwatt a smaller desktop system using XFCE as the core interface. (known as mWOS)

µWattOS – Microwatt an even smaller desktop utilizing a minimal desktop GUI or command line. Ideal for appliances, small systems, kiosks, or old computers.

Substation – The wattOS server

மேலும் தகவலுக்கு இங்கே வாருங்கள்.

13 ஆடி, 2008

இலவச வேர்ட்பிரஸ் வகுப்பு

ஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).

இதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.

எப்பிடி சொல்லிக்குடுக்க போறன்?
என்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.

மொழி மூலம்
தமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை பொறுத்தது)

உத்தேச பொருளடக்கம்
1. வேர்ட்பிரஸ் என்றால் என்ன?
2. என்ன மென்பொருட்கள் என்னத்துக்கு பாவிக்கிறன்.
3. வேர்ட்பிரஸ் நிறுவல் – எங்கள் கணினியில்
– வழங்கி ஒன்றில்
4. வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளல்
4.5 CSS அறிமுகம் (நீங்க விரும்பினா மட்டும்)
5. வேர்ட்பிரஸ் theme உருவாக்கம் – கொஞ்சம் விரிவா
6. வேரட்பிரஸை மேம்படுத்தல் – Custom fields.

கால அளவு
ஒண்டு தொடக்கம் ஒண்டரை மணித்தியாலம்

நேரம்
பங்குபற்றுபவர்களை பொறுத்து தீரமானிக்கபடும்

சரி உங்களிட்ட என்ன இருக்கவேணும்.
அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
VNC நிறுவப்பட்ட கணினி
வேகமான இணைய இணைப்பு

உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வேணும்.
CSS பற்றி கேள்விப்பட்டிருக்க வேணும்.
PHP, MySQL எண்டு கொஞ்சம் உலகத்தில இருக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்.

சரி நீங்கள் குறுக்கால கேள்வி கேக்கலாமா?
வடிவா கேக்கலாம். ஆனா நான் பதில் தெரிஞ்சாத்தான் சொல்லுவன்.

பங்குபற்ற என்ன செய்யவேண்டும்.
உங்களுக்கு எந்தெந்த நாளில என்னென்ன நேரம் சரிவரும் (தயவு செய்து இலங்கை இந்திய நேரத்தை குறிப்பிடவும்), என்ன மொழி மூலம் எண்டா நல்லம் எண்டு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டா சரி. (உத்தேச பொருளடக்கத்தில ஏதாவது சேக்க வேணும் எண்ட நினைச்சாலும் பின்னூட்டத்தில சொல்லுங்கோ.

பின்குறிப்பு
உங்களுக்கு தெரிஞ்சாக்களுக்கு இதைப்பற்றி உங்கள் பதிவு மூலமா சொல்லுங்கோ.
இந்த வகுப்பு நல்லா நடந்தா WordPress, Joomla பற்றி மேலும் சில வகுப்புகள் எடுக்கிற யோசனை இருக்கு.
மு.மயூரனிட்ட wiki பற்றி ஒரு வகுப்பு எடுக்கச்சொல்லி எல்லாருமா சேந்து ஒரு அலுப்பு குடுக்கலாம்.

9 பங்குனி, 2008