கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

Google cheat sheet

முதல் முறையாக கூகிளிற்கென்று ஒரு Cheat sheet வெளியிடப்பட்டுள்ளமையினை இப்பொழுதுதான் நான் பார்க்கின்றேன். அனேகமாக கூகிள் நிறுவனத்தின் சேவைகள் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள இது உங்களுக்கு உதவும். இதில் கூகிளின் சேவைகள் பற்றி மட்டுமல்லாது அதன் இயக்கங்கள், அதன் முகவரிகள் மற்றும் அதன் உத்தியோகபூர்வ பதிவுகள் அனைத்தும் இரண்டு பக்கத்தினுள் இடம்பெற்றிருக்கின்றன.




இது கூகிள் நிறுவனத்தின் வெளியீடோ அல்லது அவர்களது உத்தியோகபூர்வமானதோ அல்ல.

22 மாசி, 2007

கூகிள் Spreadsheets புதிய வசதிகள்

கூகிள் தனது Spreadsheet இல் ஒவ்வொரு கோப்பிற்கும் நேரவலயத்தையும்(Timezone), Local settings இனையும் மாற்றுவதற்கு இப்போது வசதிகளை செய்துள்ளது.

நேரவலயத்தில் மாற்றத்தை செய்வதன் மூலம் நேரத்தை பயன்படுத்துகின்ற NOW(), TODAY() போன்ற function களிலும் Timestamps மற்றும் revision history dates போன்றவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

Local settings இல் மாற்றம் செய்வதன் மூலம் பணத்தின் குறியீடு மற்றும் எண்கள் பயன்படுத்தப்படும் முறை என்பவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

நீங்களும் முயற்சித்து பாரத்துவிட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கள். (Click on File —> Settings)

18 மாசி, 2007

ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்

கூகிள், ஜிமெயிலின் இடைமுகத்தினை தமிழில் உருவாக்கி வரும் அதேவேளை அதிலுள்ள சொற்பிழை திருத்திக்குமான (Spell checker) அகராதியினையும் தமிழில் உருவாக்கி வருகின்றது. தமிழ் இடைமுகம் இன்னமும் பாவனைக்கு வராத போதிலும் சொற்பிழை திருத்தி இப்போதே பாவனைக்கு வந்து விட்டது. ஆனால் அது இப்போதும் தொடர்ந்து படியேற்றப்பட்டு வருவதால் அனேக தமிழ் சொற்களை பிழையெனவே காட்டுகின்றது.

அனேகமாக ஜிமெயிலின் அடுத்த பிறந்தநாளின் போது (01-April-2007) பூரணமான தமிழ் ஜிமெயிலினை எங்களால் பயன்படுத்த முடியும் என நினைக்கின்றேன்.

17 மாசி, 2007