Posts Tagged "search"

Search Me – அழகாய் தேடலாம் வாங்க..

கூகிள், யாகூ, லைவ் எண்டு எல்லா தேடுபொறிக்கும் போய் தேடிப்பாத்தாச்சு. எல்லாம் ஒரே எழுத்துக்களா வாசிக்கவே அலுப்பா இருக்குதா. சரி Searchme க்கு வாங்க.

இது மற்றைய தேடுபொறிகள் போலல்லாமல் தேடல் முடிவுகளை மிக அழகான முறையில் iTunes album களை காட்டுவது போல, உங்கள் குறிச்சொல் இருக்கும் இணையத்தளங்களின் திரைவெட்டுகளை காட்டுகிறது.

இது பிளாஸ் பிளேயரை பயன்படுத்துவதால் யுனிகோட் ஒருங்குகுறி சரியாக தெரியவில்லை.
போய் தேடிப்பாத்திட்டு திரும்பி வந்து ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்க..

10 ஆடி, 2008

Live Vs. Google

இணையத்தில் மிக அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளங்கள் தேடுபொறிகள் தான். இவைதான் அனேகமாக தொடக்கப்புள்ளியாக இருக்கின்றன. இத்தேடுபொறிகளினுள்ளே எது சிறந்தது என்கின்ற போட்டி அடிக்கடி ஏற்படுவது வழமை.

மைக்ரோசொவ்ற் நிறுவனத்தின் Live தேடுபொறியினையும் கூகிள் தேடுபொறியினையும் இங்கு அழகாக ஒப்பிட்டிருக்கிறார்கள். போய் பாருங்கள்.

6 ஆனி, 2008

விக்கிபீடியா தேடுபொறி

Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.

முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.

6 வைகாசி, 2007