Windows skydrive
கூகிள் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் இணைய இடங்களுக்கு மாற்றாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது windows live folders எனும் சேவையின் பேற்றா பதிப்பினை இவ்வருட மே மாதமளவில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் அது உடனடியாகவே பொது பயனாளர்களின் பாவனைக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் இப்போது மைக்ரோசொவ்ற் நிறுவனம் 500Mb இடவசதி கொண்ட (முன்னையது 250) windows skydrive இன் பேற்றா பதிப்பினை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இங்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய எந்தவகையான கோப்புகளையும் சேமித்து வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட உங்கள் கோப்புகளை public, shared மற்றும் private என உங்களால் வகைப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இருந்தாலும் கூகிளின் இலவச 3.8Gb கொள்ளளவம் (gmail + picassa web albums) மற்றும் அப்பிள் நிறுவனத்தின் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய 10Gb கொள்ளளவம் (இலவசமல்ல வருடத்திற்கு 99$, இதுவும் விரைவில் இலவசமாகலாம் எனும் கருத்தும் நிலவி வருகின்றது.) என்பவற்றின் போட்டியை எவ்வாறு இது சமாளிக்கப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பின்னூட்டங்களில்லை