Aldebaran மற்றும் Betelgeuse

Aldebaran மற்றும் அதன் தொடர்ச்சியான Betelgeuse லியோ என்பாரால் உருவாக்கப்பட்டு பிரென்சில் வெளியிடப்பெற்ற ஒரு கொமிக்ஸ், பின்னர் cinebook நிறுவனத்தாரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றது.

நான் வாசித்த மிகச்சிறந்த sci-fi கொமிக்ஸ்களில் இதுவும் ஒன்றென்பேன்.

Aldebaran பிரென்ச்சில் 5 புத்தகங்களாய் வெளியிடப்பெற்றாலும், ஆங்கிலத்தில் இரண்டிரண்டு புத்தகங்கள் ஒன்றாக்கப்பெற்று 3 புத்தகங்களாய் வெளியிடப்பெற்றது. Aldebaran இன் மூன்றாம் புத்தகம் Betelgeuse இன் முதலாவது புத்தகத்தையும் கொண்டுள்ளது.

எங்களுடைய சூரியக்குடும்பத்தினை தாண்டி மனிதர்கள் குடியேறிய முதலாவது கிரகம் Aldebaran. துரதிஸ்டவசமாய் முதல் 1500 குடியேற்றவாசிகள் அங்கு குடியேறியவுடனேயே பூமியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டது. நூறு ஆண்டுகளின் பின்னர் கதை சொல்லப்படுகின்றது. 13 வயதேயான கதாநாயகி கிம் பூமியிலுள்ளோர் நிச்சயம் விரைவில் தொடர்பு கொள்ளுவார்கள் என நம்பியிருக்க மார்க்கோ வழமையான ஒரு இளைஞன். அவர்கள் வசித்த மீன்பிடிக் கிராமம் பூரணமாய் அழிந்து போக நகரத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் கிம்மும் மார்க்கும் மற்றும் அக்கிரகத்தின் இரகசியங்கள், மோசமான அரசாங்கம் என கதை செல்கின்றது.

Aldebaran இல் நிலைமை சரியாகிய பின்னர் 2184ம் வருடத்தில் Betelgeuse நட்சத்திரத்தினை அண்டிய கிரகத்தில் இரண்டாவது குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது. 3000 முதல் குடியேற்றவாசிகளுடன் சென்ற முதல் விண்வெளிக்கப்பல் பிரச்சனை ஏதும் இன்றி சுற்றுவட்டப் பாதையினை அடைய அங்கிருந்து ஒரு குழு குடியேற்றவாசிகளை வரவேற்க கிரகத்தை சென்றடைகின்றது. அத்தோடு பூமியுடனான தொடர்புகள் ஒரேயடியாய் இல்லாது போய்விட்டது. ஆறு ஆண்டுகளின் பின்னர் பூமி ஒரு மீட்பு குழவினை என்ன நடைபெற்றதென அறிய Aldebaran இலிருந்து Betelgeuse இற்கு அனுப்புகின்றது. பூமியில் தன் கல்வியை அப்போதுதான் முடித்து Aldebaran இற்கு திரும்பிய 24 வயதாகும் Kim இன் தலைமையில் நால்வர் கொண்ட சிறிய மீட்புக்குழு Betelgeuse இனை அடைகின்றது. ஆறுமாதங்கள் அங்கேயெ இருக்கும் கிம் மற்றும் Betelgeuse இல் என்ன நடைபெறுகின்றது என கதை தொடர்கின்றது.

வாசிக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் கீழே வைக்க மனம் வராது என்பது நிச்சயம்.

இந்த கொமிக்ஸ் தொடர் மூன்றாவதாய் Antares கிரகத்தில் தொடர்கின்றது. அதைப்பற்றி இன்னுமொரு பதிவு எழுதுகின்றேன். Cinebook நிறுவனத்தார் இதுவரை இரண்டு பகுதிகளைத்தான் வெளியிட்டிருக்கின்றார்கள்.

புத்தகத்தை வாங்க : http://www.cinebook.co.uk/index.php?cPath=152
ebook ஆக வாங்க : http://www.izneo.com
(izneo.com இணையத்தளம் பிரென்சு இணையத்தளம் ஆயினும் நீங்கள் ஆங்கில பதிப்புக்களையும் அங்கே வாங்கலாம்.)

குறிச்சொற்கள்:

3 பின்னூட்டங்கள்

  1. மயூ சொல்லுகின்றார்: - reply

    நன்றாக இருக்கின்றது கதையின் களம். புத்தகம் வாங்கி மெயில் வழியே இலங்கைக்கு இறக்க பல ஆயிரங்கள் முடிந்துவிடுமே 😉