இந்த வார இணையம் – பெப் 7
Bootstrap 2 இனை வெளியிட்டது ருவிட்டர்
ருவிட்டர் பல திறமூல நிரல்களை வெளியிட்டிருந்தாலும் அவற்றில் முக்கியமானது Bootstrap framework. இலகுவாக இணையத்தளங்களை உருவாக்குவதற்கான HTML, CSS, javascript மற்றும் பயனர் இடைமுகப்பை கொண்டதுதான் இந்த Framework. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இரண்டு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிந்து கொள்ளவும் தரவிற்க்கிக் கொள்ளவும் கீழுள்ள தொடுப்பை சொடுக்குங்கள்.
http://twitter.github.com/bootstrap/index.html
Vim ஐபாட் இல்
கணினி மொழிகளை தினமும் பயன்படுத்துபவர்களின் விரும்பி பயன்படுத்தும் Editor, Vim ஆகும். பயன்படுத்துவதற்கு கற்றுக்கொள்ளுவதற்கு சிறிது காலம் எடுத்தாலும் மிகவேகமாக வேலைகள் செய்ய இதனைவிடச் சிறந்த Editor வேறேதும் இல்லை. உருவாக்கப்பட்டு இருபது வருடங்களாகின்ற இந்த மென்பொருள் இப்போது ஐபாட்டிலும் செயல்படக்கூடிய மென்பொருளாய் உருவாக்கப்பட்டுள்ளது.
VIM இணையத்தளம் : http://www.vim.org
VIM for Ipad : http://applidium.com/en/applications/vim/
Firefox பதிப்பு 10 வெளியானது.
பலரும் விரும்புகின்ற Firefox இணைய உலாவியின் மேம்படுத்தப்பட்ட 10வது பதிப்பு இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள தொடுப்பை சொடுக்குங்கள்.
http://www.mozilla.org/en-US/firefox/10.0/releasenotes/
போட்டோசொப்பில் Grids
இணையத்தளங்களை போட்டோசொப்பில் வடிவமைக்கத் தொடங்கும்போது முதலில் Grid களை உருவாக்கிக்கொள்ளுவது, நீள அகலங்களை சரியான முறையில் கண்டுகொள்ள உதவும். இதனை இலகுவாக்குவதற்காக உள்ள இலவச நீட்சி GuideGuide.
தரவிறக்க : http://www.guideguide.me
HTML 5 மற்றும் CSS 3 இனை பயன்படுத்த தொடங்கலாமா?
இணையத்தளங்களை வடிவமைக்கும் மொழியாகளாகிய HTML மற்றும் CSS என்பன புதிய பதிப்பினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஏலவே பலரும் அவற்றை பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். ஆனால் அனைத்து இணைய உலாவிகிளும் (குறிப்பாக Internet Explorer இன் முந்தைய பதிப்புக்கள்) அவற்றிற்கு ஒத்திசைவானவையாக இல்லை. எனவே இந்த புதிய வசதிகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை. எவற்றை பயன்படுத்தலாம் எவற்றை இன்னமும் பயன்படுத்த முடியாது என்பவற்றை விளக்கமாக சொல்கின்றது இந்த html5please.us என்கின்ற இணையத்தளம்.