உதவிக்குறிப்புகள்

வேறென்ன உதவிக் குறிப்புகள் தான்..

இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள்





அவ்வளவுதான்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />

</object>

நீங்கள் வேர்ட்பிரஸ் பாவனையாளராக இருந்தால் கீழிருக்கும் plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

[download#8#image]

பின்னர் widget பக்கத்திற்கு சென்று Tamil Calendar இனை இழுத்து வந்து உங்கள் sidebar இல் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.




உங்கள் அடைப்பலகை widget இனை ஏற்காவிடின் கீழ்வரும் வரியை plugin இனை நிறுவிய பின் உங்கள் sidebar.php இல் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

<?php getTamilCalendar(); ?>

வேற சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

30 தை, 2008

Joomla ன்னா என்ன?

நேற்று நான் Joomla வெளியானது பற்றி எழுதிய பதிவின் பின்னுட்டமாக வடுவூர்குமார் Joomla பற்றி யாராவது எழுதும்படி கேட்டிருந்தார். எனக்கு தெரிந்தவரை எழுதுகின்றேன்.

ஒரே வரியில சொல்லவேண்டும் என்றால் Joomla ஒரு Content Management System. சரி கொஞ்சம் விளக்கமா பாப்பம்.

இணையம் என்பதன் ஆரம்பம் முதல் ஏறத்தாள பத்து வருடங்களாக நிலையான இணையப்பக்கங்களே (Static page) இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதன் பின்னரே Content Management System என்ற வகையில் உருவாகிய இயங்கு தளங்கள் (Dynamic web pages) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இவற்றில் ஒரு இலவச மிகப்பிரபலமான CMS தான் Joompa. இது PHP மற்றும் MySQL ஐ அடிப்படையாக கொண்டது. 2005ம் ஆண்டுவரை Mambo என்கின்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு வந்த இது, அதன் மேலாளர் குழு செயல்நிரல்களை எடுத்துக்கொண்டு வெளியேறிய பின்னர், Joomla 1 என்கின்ற பதிப்பாக Mambo 4.5.2.3 இன் சிறிய மாற்றங்களோடு வெளிவந்தது. Mambo இன் அடைப்பலகைகள் மற்றும் Extention கள் கூட இதில் வேலை செய்யும்.

இப்பொழுது இரண்டு நாட்களின் முன்னர் அடிப்படை கட்டுமானங்களிலிருந்து மாற்றம் பெற்று ஒரு object-oriented PHP framework ஆக Joomla 1.5 வெளிவந்திருக்கின்றது. இதில் நீங்கள் பழைய பதிப்பிற்கென உருவாக்கப்பட்ட அடைப்பலகைகளையோ Module களையோ Legacy Mode இல் விட்டால் அன்றி பயன்படுத்த முடியாது.

Joomla எவ்வாறு வேலை செய்கிறது என்பதை மிக இலகுவாக கீழ் குறிப்பட்டவாறு காட்டிவிடலாம்.

இதில் Microsoft Internet Information Server (IIS) இனை பயன்படுத்த வேண்டுமாயின் உங்கள் இயங்குதளம் கட்டாயம் வின்டோஸ் ஆக இருக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது Joomla இயங்குவதற்கு

PHP 4.3.x அல்லது மேம்பட்டது

MySQL 3.23.x அல்லது மேம்பட்டது

Apache 1.13.19 அல்லது மேம்பட்டது
தேவை.

உங்களிடம் ஒரு வழங்கி இல்லாவிட்டால் இவற்றை இலவசமான அவ்வவ் தளங்களில் இருந்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி Joomla வை பரிசோதிக்கலாம் அல்லது இலகுவாக என்னைப்போல XAMPP இனை தரவிறக்கி நிறுவி பரிசோதிக்கலாம். (Joomla வையும் தரவிறக்கி நிறுவ வேண்டும், அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. வழமையான அடுத்து அடுத்து தான்.). XAMPP இல் உங்கள் கணினியை ஒரு வழங்கியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்தும் உள்ளன. (வின்டோஸ் மற்றும் லினிக்ஸ் பதிப்பும் உண்டு, நீங்கள் Joomla வை மட்டும் என்றல்ல ஒரு வழங்கியால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றை இதைக்கொண்டு செய்ய முடியும். MySQL இனை இலகுவாக பயன்படுத்துவதற்குரிய PHPMyAdmin உம் இதனுடன் உண்டு)




சரி Joomla வை வைத்து என்ன செய்ய முடியும்??
ஒரு தனிநபருடைய இணையத்தளத்தில், வலைப்பதிவில் இருந்து ஒரு பன்னாட்டு நிறுவன இணையத்தளம் வரைக்கும் இதனை வைத்து இலகுவாக எந்தவித கணினி மொழி அறிவும் இன்றி உருவாக்கி விட முடியும். (சிறிதளவு PHP மற்றும் MySQL, CSS அறிவிருப்பின் மிகச்சிறப்பாக உருவாக்கலாம்).

Joomla வில் இரண்டு முகப்புகள் உண்டு. ஒன்று நாங்கள் வழமையாக பார்க்கும் முன்முகப்பு மற்றையது அதனை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் தகவல்களை சேர்ப்பதற்கான மிக இலகுவாக கையாழக்கூடிய நிருவாக முகப்பு.

உண்மையில் ஒரு முறை நீங்கள் கணினியில் இதனை நிறுவிவிட்டால் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் எழாது என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு உங்கள் தளம் சம்பந்தமாக அடிப்படையான தரவுகளை இணைக்கும் பகுதியை பாருங்கள்.

அதேபோல உங்கள் இணையத்தளத்தில் ஒரு சர்வே எடுக்க வேண்டுமானால் மிக இலகுவாக ஒரு சொடுக்கில் ஒரு Poll Module இனை தளத்திற்கு கொண்டுவந்துவிட முடியும்.

அதே போல நீங்கள் உங்கள் தளத்திற்கு ஒரு தகவலை சேர்க்க வேண்டுமானால் புளொக்கரில் உள்ளதுபோன்ற ஆனால் அதனை விட மேம்பட்ட ஒரு WYSIWYG editor உள்ளது.

இப்போது புதிய பதிப்பில் நீங்கள் உங்கள் ஜிமெயில், ஓபின் ஐடி கொண்டு உள்நுழையும் வசதிகளும் வந்திருக்கின்றன.

சரி ஆக CMS என்றால் Joomla தானா?? இல்லை இதற்கு நிகரான Drupal மற்றும் Xoops போன்று பல உள்ளன.

முக்கியமாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் CMS மற்றும் Blog இரண்டிற்கும் இடையில் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் எங்கள் தேவைகளை பொறுத்த Blog ஆனா WordPress இனை CMS ஆகவும் CMS ஆன Joomla மற்றும் Drupal இனை Blog ஆகவும் பயன்படுத்துவதுண்டு. அவைபற்றி தனி ஒரு பதிவு எழுதினால் தான் பூரணமாக எழுத முடியும்.

வேறென்ன ஏதாவது ஒரு சந்தேகம் இருந்தா கேளுங்க. தெரிஞ்சளவிற்கு சொல்லுறன்.

26 தை, 2008

Why I love Gmail

நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.

ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். இருந்தாலும் கொஞ்சக்காலம் போக கொஞ்சம் கொஞ்சமா ஜிமெயிலுக்கு அடிமையாகியாச்சு. இப்ப பொதுவா எனக்கு ஜிமெயிலில என்ன பிடிச்சிருக்கெண்டு பாப்பம்.

அரட்டை
இந்த அரட்டை வசதி இப்ப யாகூ இலயும் இருந்தாலும் அது பெரும்பாலும் ஒருவராலும் பயன்படுத்த படுவதில்லை என்பதுதான் உண்மை.

இந்த அரட்டையில மிகமுக்கியமான பயன் என்னெண்டா அரட்டைகளை சேமித்து வைக்கிறது. விருப்பமில்லையெண்டா விடலாம். அதுக்கும் வசதி இருக்குது.

POP3
எனக்கு மிகவும் பயன்படுற ஜிமெயிலின்ர வசதி இதுதான். இந்த வசதி இருக்கிறதால ஜிமெயில் இப்ப என்ர மின்னஞ்சல் Client ஆக பயன்படுகிறது என்கிறதுதான் உண்மை. அத்தோட வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பெறப்படுகின்ற மின்னஞ்சல்கள் வேறு வேறு Label கள் மூலம் வேறுபடுத்தப்பட்டிருத்தலும் இதன் சிறப்பம்சமாகும். இதன்மூலம் Spam உம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.


அத்தோட இவ்வாறு மின்னஞ்சல்களை ஒன்றா இணைக்கிறதால மின்னஞ்சல்கள் அனுப்பும் போதும் எங்களுக்கு விரும்பிய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பும் வசதியும் இதில் இருக்கின்றது.

Labels
மற்றைய மின்னஞ்சல் வழங்குநர்களின் Folders என்பதற்கு மாற்றீடாக கூகிள் அறிமுகப்படுத்தியதுதான் இந்த Label. பலர் Label இனை விட folder மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த இலகுவானதாக இருப்பதாக கூறினாலும் என்னை பொறுத்தவரையில் Label சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றேன்.

ஜிமெயிலில் இருக்கின்ற எனக்கு மிகவும் பயன்படுகின்ற மற்றுமொருவிடயம், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஒரே மின்னஞ்சலுள் சேமிக்கப்படல். இதில் இன்னமும் முக்கியமானவிடயம் என்னவெனில் இந்த மின்னஞ்சல் கலந்துரையாடலில் பலர் கலந்துகொண்டால் ஒவ்வொருவர் பெயரும் வெவ்வேறு நிறங்களில்; இலகுவாக பிரித்தறியக்கூடியவாறாக அமைந்திருத்தல். எனது அலுவலகம் சார் மின்னஞ்சல்களின்போது இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

பிழைதிருத்தம்
இந்த பிழைதிருத்த வசதி அனேகமான மின்னஞ்சல் சேவைகளில் இருந்தாலும் ஜிமெயிலின் பிழைதிருத்தியை பயன்படுத்தியவர்கள் அதன் இலகுத்தன்மையில் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.

கீழே குறிப்பிடுகின்ற இரண்டு வசதிகளும் கூகிளின் அனைத்து சேவைகளுக்கும் பொதுவானதாயினும் இந்த வசதிகளும் மிகவும் பயனுள்ள வசதிகளே. இவற்றை திரைவெட்டுகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


கடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க.
ஏன் இது இன்னமும் அங்க இருக்கு???

28 கார்த்திகை, 2007