ஊரோடி

பதிபவர்கள்

எல்லா இடத்திலயும் பதிபவர்கள் ஒன்றுகூடி கூட்டங்கள் வைக்கினம். எனக்கும் ஒரு ஆசை கூட்டம் வைக்க இல்ல. எத்தனை பேர் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு அறிய. உங்களுக்கு யார் யார் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ. மெத்தப்பெரிய உபகாரமா இருக்கும்.

8 கார்த்திகை, 2006

யாழ் மண்

யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.

தேங்காய் எண்ணெய் – 480.00 (240.00)
அரிசி – 110.00 (38.00)
சீனி – இல்லை (60.00)
பருப்பு – 140.00 (60.00)
சிகரெட் – 30.00 (12.00)
மண்ணெண்ணெய் – 190.00 (45.00)
பெற்றோல் – 450.00 (101.00)
நெருப்பெட்டி – 18.00 (2.50)

இன்னும் விலைகள் தெரியோணுமெண்டா சொல்லுங்கோ இன்னொரு முறை மிச்சத்தையும் எழுதுறன்.

13 ஐப்பசி, 2006

யாழ்ப்பாணம்

சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது. UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..

12 ஐப்பசி, 2006