ஊரோடி

AS Library.org

நீண்ட காலமாக flash மற்றும் Flex சம்பந்தமான எனது இணையத்தளத்தை ஆரம்பிக்க வேண்டு என்று எண்ணி வந்தேன் (ஏறத்தாள 5 வருடங்கள்). எனது இந்த ஊரோடி வலைத்தளத்தை ஆரம்பித்த போது கூட எனது முதலாவது பதிவில் இதனை குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதுதான் அதனை ஆரம்பிக்க முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலைகள் பாக்கி உள்ளது.

வருகை தந்து பாருங்கள்.

15 ஆனி, 2007

மலைநாடானுக்கு நன்றிகள்.

எல்லாற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில காட்டுப்படுறது என்றது பொதுவானது. ஆனா என்னுடைய ஊரோடி வானொலியில தெரிஞ்ச செய்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்பிடி தெரிய வைச்சவர் மலைநாடான். தனது இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சியில என்னுடைய இந்த பதிவை பற்றி அறிமுகம் செய்து வைச்சிருக்கிறார். இது நிச்சயமா என்னோடு வாசகர்களின்ர அல்லது விருந்தினர்களின்ர எண்ணிக்கையை கூட்டும் என்பது ஒருபக்கம் இருக்க நானும் ஏதோ எழுதிறன் எண்டு இரண்டு மூன்று பேராவது நினைக்கிறார்கள் எண்டு ஒரு சந்தோசம்.

மலைநாடானுடன் எனது பழக்கம் நிச்சயமாக மண்ணிலிருந்தே உருவானது என நினைக்கின்றேன். ஏனென்றால் எத்தனை பதிவுகள் இருந்தாலும் நான் முதலில் ஈழத்தவர்களின் பதிவு என்றால் உடன் சென்று வாசிப்பது வழக்கம். இதற்காக நான் யாரையும் வெறுக்கின்றேன் என்று அர்த்தமல்ல. அப்படி வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட நான் இருப்பதில்லை. இருந்தாலும் தமிழ்மணத்தின் முகப்பில் அந்த பெயர்களை கண்டவுடன் எனது விரல் தானாகவே அந்த தொடுப்புகளை சொடுக்கிவிடும். அப்படித்தான் மலைநாடானின் பக்கங்கள் எனக்கு தெரிய வந்தது, அவருக்கும் அவவாறு இருக்கக்கூடும். அதன்பின் ஜிமெயிலின் அரட்டை மூலம் சிலதடைவைகள் சுகம் விசாரித்திருக்கின்றோம். யாழ்ப்பாண செய்திகள் பரிமாறியிருக்கின்றோம். ஆனால் மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை. இப்படியான பழக்கம் மலைநாடானுடன் மட்டுமல்ல வேறு பல ஈழத்து பதிவர்களுடன்தான்.

சரி அப்பிடியே மலைநாடானின் அந்த நிகழ்ச்சியை கேட்க இங்கு சொடுக்குங்கள்.

20 பங்குனி, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 தை, 2007