மென்பொருள்

Angry Words

சில காலங்களின் முன்னர் எனக்கு பிடித்த ஐபாட் மற்றும் ஐபோன் மென்பொருள்கள் மற்றும் ஐபோன் விளையாட்டுக்களை வரிசைப் படுத்தியிருந்தேன். அதன்பின்பு பல புதிய ஐபோன் மற்றும் ஐபாட் விளையாட்டுக்களை நான் விளையாடியிருந்தாலும், சமீப காலமாக AngryWords அவற்றில் ஒரு முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றது. இவ்விளையாட்டினை iOS இல் மட்டுமென்றல்லாது, அன்டொரியிட் மற்றும் வேஸ்புக்கிலும் விளையாடமுடியும்.

எழுத்துக்களை அடுக்கி சொற்களை உருவாக்கும் scrabble விளையாட்டு உங்களுக்கு விருப்பமென்றால் நீங்கள் கட்டாயம் AngryWords இனை விரும்புவீர்கள். ஏறத்தாள zinga இன் Words With Friends விளையாட்டினை இது ஒத்திருந்தாலும், மிக அழகான பயனர் முகப்பு, மற்றும் 12 மொழிகளில் விளையாட முடிதல் இதன் சிறப்பம்சமாகும்.

கீழே நான் இறுதியாய் விளையாடியதன் திரைவெட்டு

Angry Words

தரவிறக்கி விளையாட :
ஐபோன் மற்றும் ஐபாட் – App store
அன்டொரியட் – Google Play Store

29 மார்கழி, 2012

FLUX RSS Reader

நீங்கள் ஏலவே வின்டோஸ் பதிப்பு எட்டினை பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்களானால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான புதிய rss reader மென்பொருள் இது. அழகிய metro ui இனை பயன்படுத்துவதோடு இலகுவாக உங்கள் செய்தியோடைகளை வகைப்படுத்தி வாசிக்க உதவுகின்றது., இம்மென்பொருளிற்கு வின்டோஸ் மொபைல் பதிப்பொன்றும் உண்டு.

flux-1
flux-2

மேலதிக விபரங்களுக்கும் தரவிறக்கவும் : http://flux-app.com

27 மார்கழி, 2012

அடொபி நிறுவனம் Brackets என்கின்ற பெயரில் ஒரு புதிய இலவச திறமூல தொகுப்பான் ஒன்றினை உருவாக்கி வருகின்றது. இன்னமும் அல்பா பதிப்பில் இருக்கும் இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த முடியும்.

இந்த தொகுப்பானின் சிறப்பம்சம், இது HTML5, CSS3 மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் இனை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதாகும்.

மேலதிக தகவல்களுக்கு: http://brackets.io
தரவிறக்க: https://github.com/adobe/brackets/downloads

14 ஆவணி, 2012