மென்பொருள்

Tomahawk Media Player

எங்கள் கணினியில் உள்ள பாடல்களை கேட்க பல மென்பொருள்கள் உதவுகின்றன. வின்டோஸ் இல் Windows Media Player, மக் இல் iTunes என இயல்பிருப்பாகவே மென்பொருகள் இருந்தாலும், Tomahawk அவற்றினை விட சிறப்பனாதும், திறமூல நிரலையுடையதுமான ஒரு மென்பொருள்.

உங்கள் கணினியில் இருக்கின்ற பாடல்களை மட்டுமல்லாது இணைவழி சேவைகளான youtube, soundcloud, spotify, last.fm, grooveshark போன்ற பல்வேறு சேவைகளூடாகவும் பாடல்களை இம்மென்பொருளை பயன்படுத்தி கேட்க இயல்வது மிகுந்த சிறப்பான வசதியாகும். இம்மென்பொருள் அனைத்து இயங்கு தளங்களுக்கும் கிடைக்கின்றது.

தரவிறக்க: http://www.tomahawk-player.org

9 வைகாசி, 2012

ஜிம்ப் 2.8 வெளியானது

அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு இணையான வசதிகளை கொண்ட திறமூல Gimp மென்பொருளின் புதிய பதிப்பான 2.8 இன்று வெளியாகி உள்ளது. ஏறத்தாள மூன்று வருடகால மேம்படுத்தல்களின் பின் இது வெளியாகியுள்ளது.

இப்புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க புதிய வசதிகள்:

1. ஒரு சாளர பயனர் முகப்பு.
இது வரை காலமும் Gimp ஆனது floating window பயனர் இடைமுகப்பை கொண்டிருந்தது. இப்பதிப்பிலிருந்து ஒரு சாளர பயனர் இடை முகப்பாய் இது மாற்றப்பட்டுள்ளது.

2. திரையிலேயே உரைகளை உள்ளிடல்.
இதுவரை காலமும் Gimp இலிருந்த மிகப்பெரிய பிரச்சனை இதுவாகும். நீங்கள் உங்களுக்கு தேவையான உரையை ஒரு சாளரத்தில் தட்டச்சிட அது திரையில் கொண்டு வரப்படும். இப்போது நீங்கள் நேரடியாகவே உங்களுக்கு தேவையான இடத்தில் உரையை தட்டச்சிடவும் வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.

3. Layer Grouping
ஒரு வகையான Layer களை குழுக்களாக்கி வைத்து பயன்படுத்த முடிவதும் இப்பதிப்பில் ஒரு புதிய வசதியாகும்.

மேலும் தகவல்களுக்கும் தரவிறக்கவும் : http://gimp.org

4 வைகாசி, 2012

எனக்கு பிடித்த ஐபாட் மென்பொருள்கள்

கணினிக்கு பிரதியிட்டாய் பல நேரங்களில் பயன்படுத்தக்கூடிய சிறந்ததொரு சாதனம் ஐபாட். இது எனது கணினிப்பாவனையை ஏறத்தாள அரைவாசியளவு குறைத்திருக்கின்றது. செய்திகள் மற்றும் டிஜிற்றல் புத்தகங்களை வாசிப்பது, சமூக இணையத்தளங்களில் உலாவுவது மற்றும் செய்தியோடைகளை படிப்பது போன்ற அதிகளவு நேரத்தை எடுக்கின்ற பல செயற்பாடுகளுக்கு தனியே ஐபாட் போதுமானதாயுள்ளது. மின்னஞ்சல்களை வாசிப்பதற்கும் விரைவாக பதிலிடுவதற்கும்கூட இது சிறப்பாய் கைகொடுக்கின்றது. இங்கே எனக்கு பிடித்த 10 ஐபாட் மென்பொருள்களை வரிசைப்படுத்தியிருக்கின்றேன். சில இலவசமானவை.

FlipBoard

நீங்கள் ஒரு ஐபாட் பாவனையாளர் எனின் நிச்சயம் இம்மென்பொருளைப்பற்றி அறிந்திருப்பீர்கள், பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். என்னிடம் இருந்த பல மென்பொருள்களை தனியே இம்மென்பொருள் பிரதியீடு செய்துவிட்டது. உங்களுக்கு தேவையான செய்திகள் மற்றும் உங்கள் சமூக இணையத்தள செயற்பாடுகள் என்பவற்றை அழகான பயனர் முகப்புடன் பயன்படுத்த இலவசமான இம்மென்பொருளை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

Reeder

நீங்கள் அதிகளவு செய்தியோடைகளை வாசிப்பவர் ஆயின் நிச்சயமாய் உங்களிடம் இருக்கவேண்டிய மென்பொருள் இது. உங்கள் Google Reader இல் நீங்கள் இணைத்திருக்கும் செய்தியோடைகளை ஐபாட் இல் வாசிக்க இதனை விட சிறந்த மென்பொருள் இல்லை எனலாம். இது இலவசமானதல்ல.


AlienBlue

நீங்கள் ஒரு Reddit பயனாளர் ஆயின் உங்களுக்கு நிச்சயம் பயன்தரக்கூடிய மென்பொருள் இது. மிக இலகுவாக Reddit பதிவுகளை வாசிக்கவும், கருத்திடவும் இம்மென்பொருள் சிறப்பானது.

Skype

ஸ்கைபி இனை பற்றி எவருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஐபாட்டிற்கு ஒத்திசைவாக்கப்பட்ட இது, உங்கள் இலகுவான தொடர்பாடலுக்கு வழிவகுக்கின்றது.

செல்லினம்

உங்கள் ஐபாட்டில் தமிழில் தட்டச்சிட இம்மென்பொருள் உங்களுக்கு உதவும்.

DisplayPad

உங்கள் கணினிக்கு இரண்டாவது திரையாய் ஐபாட்டினை பயன்படுத்த அனுமதிக்கும் மென்பொருள் இது.

Facebook for Ipad

நீங்கள் சமூக இணையத்தளமான Facebook இனை அதிகம் பயன்படுத்துபவர் ஆயின் உங்களுக்கு நிச்சயம் இம்மென்பொருள் பிடிக்கும்.

TuneIn

உங்கள் ஐபாட்டினை ஒரு இணைய வானொலியாய் மாற்றி விடும் இம்மென்பொருள். உங்களுக்கு விரும்பிய வானொலிகளை இணைத்துக்கொள்ள முடிவதும் இதில் ஒரு வசதியாகும்.

iBook

இது iOS உடன் இயல்பிருப்பாய் வருகின்ற ஒரு மென்பொருள் நீங்கள் அதிகளவு டிஜிற்றல் புத்தகங்களை வாசிப்பவராயின் நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.

Livestation

உங்கள் ஐபாட்டினை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியாய் மாற்றிக் கொள்ள இம்மென்பொருள் பயன்படும். பல செய்தித் தொலைக்காட்சிகைள இலவசமாய் இம்மென்பொருளூடாய் கண்டு களிக்க இயலும்.


நீங்களும் ஒரு ஐபாட் பாவனையாளர் எனின், உங்களுக்குப் பிடித்த மென்பொருள்களை தெரியப்படுத்துங்கள்.

1 வைகாசி, 2012