மென்பொருள்

இலகுவாக Mockupகளை வரைதல்

நேற்றைய எனது mockup வரைந்து பணத்தினை வெல்லும் போட்டி பற்றிய விபரத்தில் உங்களை ஒரு mockup வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்தேன்.

இப்பதிவில் அவ்வாறு இலகுவாக Mockup களை வரைந்து கொள்ள உதவும் மென்பொருள்கள், சேவைகளை பார்ப்போம்.

1. PENCIL PROJECT
இலகுவாக மொக்அப் களை வரைந்துகொள்ள உதவும் ஒரு firefox addone இதுவாகும். உங்கள் firefox உலாவியில் நிறுவிக்கொண்டு உடனேயே வரைய ஆரம்பிக்கலாம்.

2. Mockflow
இங்கு ஒரு கணக்கினை உருவாக்கிக்கொண்டு இணையத்தளதிலேயே வரைந்து கொள்ளலாம். விரும்பினால் desktop application இனை நிறுவிக்கொண்டு அதனையும் பயன்படுத்தலாம். இலவச கணக்கு போதுமானது.

3. Mocking Bird
இங்கும் ஒரு கணக்கொன்றினை உருவாக்கிக்கொண்டீர்களானால், இணையத்தளத்திலேயே வரைந்து கொள்ள முடியும். இலவச கணக்கு உண்டு.

இவற்றைவிடவும் நாங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் போட்டோசொப்பையோ அல்லது பவர்பொயின்றையோகூட பயன்படுத்த முடியும்.

2 கார்த்திகை, 2011

இலகுவாய் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொள்ள Codecademy

கணினியில் Code எழுதுகிறவர்களை பார்த்து பலரும் பிரமித்துப்போவதுண்டு. இது எமக்குச்சரிவராது என்று எண்ணுபவர்களும் உண்டு. இதனை இலகுபடுத்தி அனைவரும் இலகுவாக Code எழுத கற்றுத்தரும் இடம்தான் Codecademy.

மிக இலகுவான ஆங்கிலத்தில் படிமுறை படிமுறையாக நீங்கள் இங்கு Code எழுத கற்றுக்கொள்ள முடியம். இதுவரையில் ஜாவாஸ்கிரிப்ட் தொடர்பான பாடங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. இலவசமாக கணக்கொன்றை உருவாக்கிக்கொண்டு ஒவ்வொரு படிமுறையாக அவ்விணையத்தளத்திலேயே செய்து பாரக்கலாம். (குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ளுவது உங்களைப்பொறுத்தது.)

நீங்கள் கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இங்கு வசதிகள் உண்டு.

30 ஐப்பசி, 2011

எனக்கு பிடித்த ஐபோன் விளையாட்டுக்கள்

சில காலங்களின் முன் எனக்கு பிடித்ததும் பயனுள்ளதுமான ஐபோனில் (iPhone) இயங்குகின்ற சில மென்பொருள்களை இங்கே பட்டியலிட்டிருந்தேன். இப்பொழுது சில விளையாட்டுக்கள். இவற்றுள் இலவசமல்லாத விளையாட்டுக்களில் கட்டாயம் ஒரு Lite பதிப்பு இருக்கும். அதனை தரவிறக்கி விளையாடி பார்த்தபின் உங்களுக்கு விரும்பினால் பூரணமான பதிப்பனை வாங்கிக்கொள்ளலாம்.

1. Highborn
ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடுகின்ற வகிபங்கு விளையாட்டு இது (turn by turn role-play game). மிகவும் விறுவிறுப்பாக இருக்கக்கூடிய இந்த விளையாட்டின் குறிப்பிடத்தக்க விடயம், எல்லா இடங்களிலும் விரவி நிற்கும் நிச்சயமாக சிரிக்க வைக்கும் நகைச்சுவையான வசனங்கள்.

2. Babylon Twins
இரட்டையர்கள் இருவர் சிறையிலிருந்து தப்புவதுதான் இங்கு கதை. நீங்கள் ஒருவரை இயக்கும்போது மற்றவர் சிலையாகிவிடுவார். இருவரிடமும் வெவ்வேறு விதமான சக்திகள் உண்டு. நிச்சயமாக உங்கள் பணத்திற்கு ஒரு நல்ல விளையாட்டு.

3. UNO
உங்களுக்கு uno விளையாட்டு விருப்பமெனில் இது கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டிய ஒன்று. நீங்கள் ஐபோனுடனோ அல்லது இணையமூடாக multi player mode இலும் விளையாட முடியும்.

4. Word with Friends
நீங்கள் Scrabble விளையாட்டில் ஆர்வமுள்ளவரெனின் இவ்விளையாட்டு உங்களுக்கானது. உங்கள் எதிராளியும் ஒரு மனிதராகவே இருக்கவேண்டி இருப்பதால், இதனை விளையாட கட்டாயம் இணைய இணைப்பு வேண்டும். அடிக்கடி தோன்றும் விளம்பரங்களை பற்றி கவலையில்லை எனில் இலவச பதிப்பே போதுமானது.

5. Luxor
நீங்கள் இவ்விளையாட்டை கணினியில் விளையாடியிருக்கக்கூடும். பந்துகளை ஒரே நிறப்பந்தால் அடித்து விழுத்தும் விளையாட்டு.

6. Sailboat PRO
வேகமான அலைகளையும் மோசமான காற்றினையும் எதிர்த்து இந்த பாய்மரப் படகை செலுத்துவதுதான் விளையாட்டு. கடினமான விளையாட்டெனினும் விளையாடத்தொடங்கிவிட்டால் நிறுத்த மனம் இராது.

7. Chess with Friends
Word with Friends போலவே இதனை விளையாடவும் இணைய இணைப்பு வேண்டும். நீங்கள் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் எனின் உங்களுக்கான விளையாட்டு இது.

8. PandaMania
நீங்கள்தான மிகவும் கோபம் கொண்ட பண்டா கரடி. உங்கள் எதிரிகள் கோட்டைகளை கைப்பற்றி விடாமல் அம்புகளால் போராடி வெல்ல வேண்டும்.

9. Monster Nitro
கரடு முரடான பாதையில் உங்கள் வாகனத்தை செலுத்தி போட்டியை வெல்லும் விளையாட்டு.

10. Aqua Moto
முன்னையதை போலவே கடலில் உங்கள் விசைப்படகுடன் போட்டியில் கலந்து கொண்டு வெல்லும் விளையாட்டு.

24 ஐப்பசி, 2011