எனக்கு பிடித்த ஐபோன் மென்பொருள்கள்

நேற்று எனக்கு பிடித்த மென்பொருள்கள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருந்தேன். அவற்றில் அனேகமானவை மக் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கக்கூடியன. விரைவில் எனக்கு படித்தமான சில உபுந்து மென்பொருள்களையும் பட்டியலிடப்போகின்றேன்.

இப்பொழுது எனக்கு பிடித்தமான ஐபோன் மென்பொருள்களை இங்கே வகைப்படுத்தி உள்ளேன். இவற்றில் எந்த விளையாட்டுக்களையும் உள்ளடக்கவில்லை. அவற்றை வேறொரு பதிவில் தருகின்றேன். உங்களிடம் ஐபோன் அல்லது ஒரு ஐபொட் ரச் இருக்குமானால் நீங்களும் இவற்றை நிறுவி பார்க்கலாம்.

BBC
பிபிசி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மென்பொருள் இது. மிக இலகுவாக செய்திகளை வாசிக்கவும், நேரடி வானொலியை கேட்கவும் கூடியதாக அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. பல செய்தி நிறுவனங்கள் தங்களுக்கென்று ஐபோன் மென்பொருள்களை வைத்திருந்தாலும் பிபிசி இனுடையதினைப்போல அவை எவையும் சிறப்பானவை அல்ல.

ALJAZEERA
பொதுவாக செய்திகளை ஒழுங்காக கேட்பவர்களுக்கு மேலத்தேய செய்தி தாபனங்களை தவிர்த்து சிறப்பாக செய்திகளை பெற்க்கூடிய இடம் அல்ஜசீரா. அவர்களுடைய உத்தியோகபூர்வ மென்பொருள் இது. இதில் செய்திகளை வாசிக்க முடிவதோடு மட்டுமன்றி நேரடியாக அவர்களின் தொலைக்காட்சியையும் பார்க்க முடியும். எனக்கு மிகமிக பிடித்தமான மென்பொருளில் ஒன்று இது. (இவர்களிடம் ஒரு நேரடி விளையாட்டுக்குரிய அலைவரிசை மென்பொருளும் உண்டு)

MediaFly
போட்காஸ்ற் களை அதிகம் கேட்பவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மென்பொருள் இது. மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பொட்காஸ்ற்களை இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் கேட்டு மகிழலாம். செய்திகளாகட்டும், தொழிநுட்ப செய்திகளாகட்டும், சிரிப்புத் துணுக்குகளாகட்டும் தினமும் உங்களுக்கு புதிய புதிய விடயங்கள் இங்கு கிடைக்கும்.

CNET-TV
நீங்கள் தொழிநுட்பச்செய்திகளை அதிகம் விரும்புபவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் CNET பொட்காஸ்ற்களை பார்க்காது இருப்பவராக இருக்க முடியாது. CNET இன் பொட்காஸ்ற்களை பார்ப்பதற்கு சிறந்த மென்பொருள் இது.

PULSE
ஐபோனில் கிடைக்கும் சிறந்த ஒரு RSS Reader இது. நீங்கள் தினமும் வாசிக்கும் இணையத்தளங்களை ஐபோனின் சிறிய திரையிலேயே சிறப்பாக வாசிக்கக்கூடியதாக தரும் மென்பொருள் இது. நீங்கள் RSS Reader பயன்படுத்துபவராயின் இம்மென்பொருள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

AMP
ஐபோனுடன் வரும் Music player க்கு சிறந்த ஒரு மாற்று இந்த மென்பொருள். நீங்கள் பாடல்கள் கேட்பதில் பிரியராயின் உங்களிடம் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன எனில் இந்த மென்பொருள் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். பாடல்கள் கேட்கும்போதே பாடல்களின் வரிகளை தேடித்தருவதும், உங்கள் பாடலுக்குரிய ஒளிப்படங்களை யுருயூபில் தேடித்தருவதும் இம்மென்பொருளின் சிறப்பம்சமாகும்.

Hidef Radio
இணைய வானொலிகளை ஐபோனில் கேட்க ஒரு நல்ல மென்பொருள் இது. கனாபிரபாவின் குரலையும் லோசனின் குரலையும் உலகின் எம்மூலையிலிருந்தும் உங்களால் கேட்க முடியும்.

Dropbox
நீங்கள் ஒரு இணையப்பாவனையாளர் எனின் உங்களுக்கு அனேகமாக Dropbox பற்றி தெரிந்திருக்கும். கோப்புகளை கணினிகளிடைய பகிர்ந்துகொள்ளவும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உள்ள சிறந்த ஒரு மென்பொருள் இது. அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் இம்மென்பொருளின் ஐபோன் பதிப்பு இது. இன்னமும் உங்களிடம் ஒரு கணக்கு இல்லாது விடின் இங்கே சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.

Champions
நீங்கள் ஒரு கிரிக்கட் பிரியராயின் உங்களிடம் இருக்கவேண்டிய மென்பொருள் இது. இலகுவாக கிரிக்கட் முடிவுகளை பார்க்க சிறந்த மென்பொருள் இது.


Emoji
உங்கள் ஐபோனில் சிரிப்பான்களை உள்ளிட உதவும் ஒரு மென்பொருள்.

IMDB
திரைப்படங்கள் பார்க்கின்ற எவருக்கும் IMDB இணையத்தளத்தை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. அந்த இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ மென்பொருள் இது. திரைப்படங்களை பற்றி தேடிஅறிந்து கொள்ள ஒரு நல்ல மென்பொருள் இது.

VLC
உங்கள் கணினியில் இருக்கும் சிறந்த Media player இப்போது ஐபோனிலும். ஐபோனில் சாதாரணமாக அனைத்து ஒளிப்படக்கோப்புகளையும் இயக்க முடியாது. VLC இனைப்பயன்படுத்தி இப்பொழுது உங்களால் எல்லாவித ஒளிப்படக்கோப்புகளையும் பார்த்து மகிழ முடியும்.

WORDPRESS
உங்கள் வேர்ட்பிரஸ் பதிவுக்கு ஐபோனில் இருந்தே பதிவெழுதவும், பின்னூட்டங்களை மட்டறுக்கவும் நல்லதொரு மென்பொருள் இது. (நொக்கியா போனுக்கும் இம்மென்பொருள் உண்டு).

Allrecipes.com
நீங்கள் ஒரு சமையல் பிரியராயின் (சாப்பாட்டு பிரியர் அல்ல) உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. மிக அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகளை கொண்டது இந்த மென்பொருள்.

குறிச்சொற்கள்: , , ,

6 பின்னூட்டங்கள்

  1. மதிசுதா சொல்லுகின்றார்: - reply

    அருமையான தகவல் நன்றி சகோதரம்.
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    http://mathisutha.blogspot.com/

  2. மதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply

    எங்களுக்கும் பிடிச்சிருக்கு 🙂 ஆனால் ஐபோன் இல்லை.

  3. darmaraj சொல்லுகின்றார்: - reply

    // இணைய வானொலிகளை ஐபோனில் கேட்க ஒரு நல்ல மென்பொருள் இது. கனாபிரபாவின் குரலையும் லோசனின் குரலையும் உலகின்
    எம்மூலையிலிருந்தும் உங்களால் கேட்க முடியும்.//
    வெற்றி வானொலி இதில வருகுதில்லை……

  4. Amalan சொல்லுகின்றார்: - reply

    நல்லாத்தான் இருக்கு. ஆனா iphone இல்லை.

  5. […] (iPhone) இயங்குகின்ற சில மென்பொருள்களை இங்கே பட்டியலிட்டிருந்தேன். இப்பொழுது சில […]