நகைச்சுவை

யாழ்ப்பாணம் பாக்கலாம்

இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.

கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.

6 மார்கழி, 2006

லேற்றஸ்ற் கைப்பேசி

நேற்று ஹர்த்தால். ஒண்டும் செய்யேலாம போயிற்றுது. உங்களுக்காக இந்த லேற்றஸ்ற் கைப்பேசின்ர படத்தை தந்திருக்கிறன். பாருங்கோவன்

26 ஐப்பசி, 2006

அறிவித்தல்

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதெனில் நீங்கள் அனைவரும் உங்கள் டிஜிற்றல் கமராவைத் தூக்கிக்கொண்டு தயாராகுங்கள் என்றும் நான் Advanced digital photography என்ற நூலைப்படிக்கத்தொடங்கி எனது புகைப்படமெடுத்தல் சம்பந்தமான அறிவை மேம்படுத்தத் தொடங்கிவிட்டேன் என்றும் இனிமேல் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது சம்பந்தமான எனது அலட்டல்களை கேட்கப் போகிறீர்கள் என்றும் அவ்வாறு வாசித்து நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.

4 ஐப்பசி, 2006