தரவிறக்கங்கள்

அப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை

சாதாரணமாக அப்பிள் கணினிகளில் தமிழில் உள்ளீடு செய்ய தமிழ்99 மற்றும் அஞ்சல் எழுத்துரு வடிவமைப்பு முறைகளே காணப்படும். நான் அவை இரண்டையுமே பயன்படுத்துவதில்லையாகையால் அப்பிள் கணினி வாங்கிய புதிதில் (2007இன் ஆரம்பத்தில்) எனக்கென பாமினி முறையில் யுனிக்கோட் உள்ளிடுவதற்கான விசைப்பலகை ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் அது பல வழிகளில் ஒரு பூரணப்படுத்தப்படாததாகவே இருந்து வந்தது. நீண்ட காலத்தின் பின்னர் இப்பொழுது அதனை மேம்படுத்தி அனைவரும் பயன்படுத்துமளவிற்கு பூரணப்படுத்தியுள்ளேன். நீங்களும் ...

மேலும் வாசிக்க →

நான் பயன்படுத்தும் AIR மென்பொருட்கள்.

Adobe Integrated Runtime (AIR) என்பது அடொபி நிறுவனத்தினால் உருவாக்கப்ட்ட ஒரு Runtime ஆகும். இத்தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் மென்பொருள்கள் அனைத்து இயங்குதளத்திலும் இயங்க வல்லன. ஆனால் அதற்கு AIR Runtime அக்கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஒரு வகையில் இது JAVA போன்றது. ஆனால் மென்பொருளை உருவாக்க நீங்கள் பல மொழிகளை பயன்படுத்த முடியும் (HTML ஐக் கூட பயன்படுத்த முடியும்) இப்படியான பல மென்பொருள்களை பல்வேறு தேவைகளுக்கும் நான் பலகாலமாக ...

மேலும் வாசிக்க →

அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்

அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது. கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள். Arthemia Bizmax Cheerful Blues Cracked Flow Gamezine Happy blog Letter Frame Magazeen Milano Paper craft Presents

மேலும் வாசிக்க →

உபுந்து படிக்கலாம் வாங்க – இலவச மின்புத்தகம்

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது. நீங்கள் உபுந்துவுக்கு மாற ...

மேலும் வாசிக்க →

ActionScript 3.0 உதவிக் கையேடு

நீங்கள் அடொபி நிறுவனத்தின் பிளாஸ் மற்றும் பிளெக்ஸ் மென்பொருள்களில் ஆர்வம் உள்ளவராக அல்லது, இணைய மென்பொருள்கள் Adobe AIR இனை பயன்படுத்தி மென்பொருட்களை உருவாக்குபவராக இருந்தால் இந்த உதவிக்கையேடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கே சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க →