நாடுகள் மொழிகள்

புதுவருடம்

உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மக்கள் இன்று புதுவருடத்தினை கொண்டாடிக்கொண்டிருந்தாலும் நாங்கள் உள்ளடங்களலாக பலர் புதுவருடத்தினை ஜனவரி முதலாம் திகதியில் கொண்டாடுவதில்லை. ஏறத்தாள இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பாவும், அமெரிக்காவும் கிறேகரி நாட்காட்டி முறைமையினை பயன்படுத்த தொடங்கியமையும், சர்வதேச சந்தையில் மேலைத்தேயத்தின் ஆதிக்கமும், பல நாடுகளில் உத்தியோகபூர்வ புதுவருடமாய் ஜனவரி ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட காரணமாகியது. இருப்பினும் பல நாடுகள் தங்களுக்கென்று தனியான புதுவருடத்தை வைத்திருப்பதும், அனேக கலாச்சாரங்கள் தங்களுக்கொன்று புதுவருடத்தை தனியாய் கொண்டிருப்பதும் இன்னமும் நடைமுறையில் உள்ளதே.

இந்து புதுவருடம்.

இந்தியா பல்கலாச்சார நாடாக இருப்பினும், அவற்றில் அனேகமானவை சித்திரை ஆரம்பத்தினையே (ஏப்ரல் நடுப்பகுதி) புதுவருடமாய் கொண்டுள்ளன. இந்நிலை இந்து சமயத்தை பின்பற்றும் இலங்கை உள்ளடங்கலாய் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

ஹிஜ்ரி இஸ்லாமிய புதுவருடம்

இஸ்லாமியர்களை பொறுத்தவரை கி.பி 610ம் வருடத்தில் முகம்மது மெக்காவிலிருந்து மதீனாவிற்கு பயணம் செய்தமையிலிருந்தே அவர்களது முதலாவது வருடம் ஆரம்பிக்கின்றது. இப்புதுவருடம் ஒவ்வோர் ஆண்டு வெவ்வேறு நாட்களில் வருகின்றமையினால், பல இஸ்லாமிய நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் ஹிஜ்ரி வருடப் பிறப்பின் நாளினை கணித்து கொண்டாடி வருகின்றன.

சீனப் புதுவருடம்.

இவர்களின் புதுவருடமும் ஒவ்வோர் ஆண்டும் மாறுபட்டு ஜனவரி மற்றும் பிப்ரவிரிக்கு இடையில் வரும். பதினைந்து நாட் கொண்டாட்டங்களுடன் புதுவருடம் கோலாகலமாய் கொண்டாடப்படும்.

chinese-new-year

ஜப்பான் மற்றும் தாய்லாந்து உத்தியோக பூர்வமாய் ஜனவரி ஒன்றினை தமது புதுவருடமாய் கொண்டிருப்பினும், கலாச்சார ரீதியாக தங்களுடைய புதுவருடங்களையும் கொண்டுள்ளன. ஜப்பானின் புதுவருடமும் சீனப் புதுவருடமும் ஒன்றாக வருகின்றது. தாய்லாந்து ஏப்ரல் மாத நடுப்பகுதியில் Songkran புதுவருடத்தை கொண்டாடுகின்றது (கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளும் இத்தினத்திலேயே புதுவருடத்தை கொண்டாடுகின்றன).

வியட்நாமியர்களும், கொரியர்களும் ஜப்பானினைப் போன்று சீனப் புதுவருடத்தினையே கொண்டாடுகின்றார்கள்.

Nowruz எனப்படும் சிரியப்புதுவருடம், ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, ஆவ்கானிஸ்தான் உள்ளடங்கலாய் பல மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டாடுப்படுகின்றது. இப்புதுவருடம் கொண்டாடப்படும் நாளும் வருடாவருடம் மாறுபடுகின்றது.

யூதர்களும் தங்களுக்கென்று தனியான Rosh Hashanah புதுவருடத்தினை கொண்டாடி வருகின்றார்கள்.

நீங்கள் இன்று புதுவருடத்தினை கொண்டாடுபவராயிருந்தால், உங்களுக்கு எனது மனமார்ந்த புதுவருட வாழ்த்துக்கள்.

1 தை, 2013

14 மில்லியன் $ பெறுமதியான படம்

கீழே இருக்கிற படத்தை பாருங்க. இது 14 மில்லியன் $ பெறுமதியானதெண்டு சொன்னா நம்புவிங்க தானே. (படத்தில சொடுக்கினா பெரிசாக்கி பாக்கலாம்)


17 ஆவணி, 2007

நம்பிக்கைகளாலான உலகம்

கீழே இருக்கின்ற படமானது இந்த உலகம் எவ்வாறு நம்பிக்கைகளை கொண்டு பிரிக்கப்பட்டிருக்கின்றது என்பதனை தெளிவாக காட்டுகின்றது.படத்தின்மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.

31 ஆடி, 2007