தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் பகுதி ஒன்றிலிருந்துதொடர்கிறது.
மதுரைத் தமிழச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமானுஜையங்கார் அவர்கள், "சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபாலபிள்ளையால் பரிசோதித்து, மு. கந்தசாமி முதலியார் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது" என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலப்பிள்ளை பதிப்பு "எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்று கேட்டபோது, (1868) விபவ ௵ கார்த்திகை ௴ என்று அம்முகப்பில்தானே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். இராசகோபாலப்பிள்ளை ...
மேலும் வாசிக்க →
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950
இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச காலம் கற்றோர் மனதிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்து வந்த தொல்காப்பிய மூலத்்தில் எழுத்ததிகாரமும், பலநூறு வருசங்களாக அவ்வாறு இருந்து வந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனமேறின.
அந்த மகாலிங்கையர் அவர்கள் தாம், ...
மேலும் வாசிக்க →
யாழ்ப்பாணக்குடாநாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மிகப்பலம்வாய்ந்த அரசொன்றினை கொண்டிருந்த இது, இதன் மிகப்பலமான காலகட்டத்தில் இந்தியாவின் இராமேஸ்வரம் தொடக்கம் புத்தளம் வரையிலாக பரந்து விரிந்த அரசொன்றினை கொண்டிருந்து. இன்று வீதிகள் தோறும் நிறைந்திருக்கும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் அதன் பெருமையை விளப்ப வல்லன.
சிறியதும் பெரியதுமாய் ஏறத்தாள மூன்றாயிரம் இந்து ஆலயங்களும் குறைவிலாத கிறீத்தவ தேவாலயங்களும் இன்றும் நிமிர்ந்து நின்று யாழ்ப்பாணத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பன.. கீழே யாழ்ப்பாணத்தை சூழ நான் ...
மேலும் வாசிக்க →
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.
ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் ...
மேலும் வாசிக்க →
சினிமா பற்றி தொடர்பதிவு எழுத இறக்குவானை நிர்ஷன் என்னை கூப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா பற்றி எழுத கூப்பிட்டதுக்கு நன்றி சொல்லுவன் எண்டு நினைச்சா கடைசிவரைக்கும் அது நடக்காது. இருந்தாலும் என்னால முடிஞ்சளவுக்கு என்ர அனுபவங்களை கீழ எழுதியிருக்கு பாருங்கோ..
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.
நான் நினைக்கிறன் 93 இல எண்டு எட்டு வயசு இருக்கும், கறண்ட எண்டாலே என்னெண்டு ...
மேலும் வாசிக்க →