இணையத்தில் கோப்புக்களை சேமித்தல் மற்றும் பரிமாறுதலுக்கு பல சேவைகள் புதிதாய் வந்துள்ள Google Drive உள்ளடங்கலாக இப்போது உள்ளன. இணையத்தில் எமது கோப்புக்களை சேமித்து வைக்கவும், அவற்றை இலகுவாக விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இச்சேவைகள் உதவுகின்றன. இவற்றில் சிலவற்றைப்பற்றி இங்கே நாங்கள் பார்க்கலாம்.
மிகவும் பிரபலமான இச்சேவையானது இலவசமாக 2GB இட அளவினை பயனர்களுக்கு வழங்குகின்றது. மேலதிக இலவச இட அளவினை மற்றவர்களுக்கு நீங்கள் இச்சேவையினை பரிந்துரைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் (18GB வரையிலும்). இந்த சேவைக்கான மென்பொருள்கள் மக், வின்டோஸ், லினிக்ஸ், iOS மற்றும் அன்ரொயிட் என அனைத்து இயங்குதளங்களுக்கும் உள்ளன. மிக இலகுவாக விரும்பியவர்களுடன் ஒரு கோப்புறையையே அல்லது ஒரு கோப்பையோ பகிர்ந்து கொள்ள முடியும்.
இச்சேவை பயனர்களுக்கு இலவசமாக 5GB இட அளவினை வழங்குகின்றது. இச்சேவை இலவச பயனாளர்களுக்கு வின்டோஸ், மக் போன்றவற்றிற்கான மென்பொருட்களை வழங்காவிட்டாலும், iOS மற்றும் அன்டொரியிட் இற்கு மென்பொருட்கள் உள்ளன.
Google நிறுவனத்திலிருந்து புதிதாய் வந்திருக்கும் இச்சேவை ஏலவே எமக்கு பரிச்சயமான Google Docs இனுடைய மேம்படுத்தல்தான். இப்பொழுது வின்டோஸ், மக் மற்றும் அன்ரொயிட் இற்கான மென்பொருள்கள் கிடைக்கின்றன. விரைவில் iOS மென்பொருள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக மற்றவர்களுடன் கோப்புக்ளை பகிர்ந்து கொள்ள முடிவதோடு, பல கோப்பு வகைகளை (psd, ai உள்ளடங்கலாக) முன்னோட்டமிட முடிவதும் இதன் சிறப்பாகும்.
நீண்டகாலமாக இச்சேவை இலவச பயனாளர்களுக்கு 25GB இட அளவினை வழங்கி வந்தது. இப்போது புதிய பயனாளர்களுக்கு 7GB இட அளவினை வழங்குகின்றது. வின்டோஸ், மக், iOS மற்றும் அன்ட்ரொயிட்டுக்கான மென்பொருள்கள் கிடைக்கின்றன. Google Drive போலவே நீங்கள் இங்கே பல கோப்பு வகைகளை உருவாக்கி கொள்ள முடியும்.
பலருக்கு இச்சேவை பரிச்சயம் இல்லாவிடினும், மேற்குறிப்பிட்ட அனைத்தையும் விட இச்சேவையை சிறப்பானது என சொல்லுவேன். இலவசமாக 5GB இட அளவினை வளங்கும் இச்சேவை உங்கள் கோப்புக்களின் பாதுகாப்புக்கு சிறப்பான கவனம் வழங்குகின்றது. அவற்றில் சில.
1. உங்கள் கடவுச்சொல் உங்கள் கணினியிலேயே encrypt செய்யப்பட்டு சேமிக்கப்படும். இதனால் அவர்களது வழங்கிக்கு உங்கள் கடவுச்சொல் செல்லாது. (கடவுச்சொல்லை நீங்கள் தொலைத்தால் மீளெடுக்கவும் முடியாது.)
2. உங்கள் ஒவ்வொரு கோப்பும் encrypt செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வழங்கிக்கு செல்லும் உங்களைத்தவிர எவராலும் கோப்புக்களை திறக்க முடியாது. இவர்களும் எல்லா இயங்கு தளங்களுக்கும் மென்பொருட்களை வழங்குகின்றார்கள்.
நீங்கள் உங்கள் கோப்புக்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுபவர் ஆயின், இச்சேவைதான் உங்களுக்கானது.
28 சித்திரை, 2012