வெளிச்சப்பெட்டி (Light box)

இப்ப சில நாட்களா என்ர பதிவுகளில இருக்கிற படங்களை பெரிசாக்கிறதுக்கு நீங்கள் சொடுக்கி பாத்திருந்தா ஒரு effect ஐ பாத்திருக்கலாம். இதுக்கு பெயர் Light Box. இது தான் இப்ப அனேகமான இணையத்தளங்களில படங்கள் பிழைச்செய்திகள் அறிவுறுத்தல்கள் போன்ற சில விசயங்களை காட்டுறதுக்கு பயன்படுத்தப்படுகுது. நானும் என்ர பதிவுகளில இப்ப படங்களை பெரிசாக்கி காட்டுறதுக்கு இதை பாவிக்க தொடங்கியிருக்கிறன். இதில இருக்கிற நன்மை என்னெண்டா படங்களை பெரிசாக்கி பாக்கிறதுக்கு நீங்கள் இன்னொரு சாளரத்தை திறக்க தேவையில்லை. அதோட திறந்து வைச்சிருக்கிற இணையப்பக்கமும் திருப்பி லோடாகிற தேவைகள் இல்லை.

இதைப்பற்றி மேலதிக விபரம் தேவையெண்டா இங்க போய் பாருங்கோ.

ஆனா இதைப்பாவிக்கிற எண்டா நீங்கள் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரலை அந்த இணையத்தளத்தின்ர வழங்கியில இருந்தே பாவிக்க ஏலாது. அதை பதிவிறக்கி உங்கட ஏதாவது வழங்கியில அல்லது ஜாவாஸ்கிரிப்ட் host பண்ணிற ஏதாவது இணையத்தளங்களை பாவிக்க வேணும். உஙகளுக்கு இதை பயன்படுத்த விருப்பம் இருந்து ஆனா இந்த வசதிகள் இல்லாம இருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ என்ர வழங்கியின்ர முகவரியை தாறன் (அதில இருந்துதான் நான் பயன்படுத்திறன்).

8 தை, 2007

CSS CHEAT SHEET

CSS என்பது எங்கள் இணையப்பக்கங்களை அழகுபடுத்த நாங்கள் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். (மொழி என்பது சரியென்று எனக்கு படவில்லை, அனால் என்ன சொல்லை பயன்படுத்துவது என்று தெரியவில்லை). இதனை பயன்படுத்தி எந்தவித படவேலைப்பாடுகளும் இன்றி அழகிய இணையபபக்கங்களை வடிவமைத்துவிட முடியும். CSS இனை இலகுவாக ஞாபகப்படுத்திக்கொள்ள இந்த Cheat sheet உதவும். சொடுக்கி பாருங்கள்.

இதனைப்பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

7 தை, 2007

உபுந்துவில போட்டோசொப்

கொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோவன்.






6 தை, 2007