கவிதை

நான் ரசித்த வாசித்த கவிதைகள்.

முட்டைவாசிகள்

அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம். பேசாமல் இருப்பதன் மூலம் சொற்களின் எல்லையை மௌனத்தை எட்டிப்பிடிக்கின்றேன். பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான். இந்த அழகிய பூக்களிடையே ஒரு மரங்கொத்தி ...

மேலும் வாசிக்க →

நட்பல்லாதது

இருட்டுக்களோடு வாழப்பழகியவன் நான் குருடனென்று நினைத்தோருமுண்டு பெரும் வீம்பனென்று கதைத்தோருமுண்டு அவர்களுக்கெப்படித் தெரியும் அவர்கள் வெளிச்சங்களும் இருட்டுக்கள் தானென்று.... மெல்ல மெல்ல சொல்லிக்கொடுத்தீர்கள் வெளிச்சம் இதுதான் என்று காட்டியும் தந்தீர்கள் கீழே விழுந்து விடுவாய் கையைப் பிடித்துக்கொள் என்றீர்கள் வேண்டாமென்று மறுத்த போதெல்லாம் உன்னிலும் உன்னை நன்கறிந்தோம் என்றீர்கள் உன்னால் முடியும் என்றீர்கள் உவகை கொள்ள வைத்தீர்கள் ஒரு கணமெனக்கும் நினைக்கத் தோன்றியது உண்மையில் அது வெளிச்சம் தானென்று ஆதரவாய் அழைத்து வந்தீர் வரைவிலக்கணங்கள் சொல்லி வைத்தீர் அத்தோடுவெளிச்சம் அதிகம் என்பதால் கண்களையும் மூடிக்கொள் என்றீர்கள்..... இருட்டுக்களோடு வாழப்பழகியவன் நான்.....

மேலும் வாசிக்க →