அடொபி நிறுவனம் தனது Creative suit 3 இனை மேம்படுத்தி Creative suit 4 இனை வெளியிட்டுள்ளது. Graphic designing துறை மற்றும் இணைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல் துறையில் முன்னணியில் இருக்கும் இந்த மென்பொருள்கள், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டுள்ளன.
அடொபி நிறுவனம் தனது முன்னைய பதிப்பினை போலவே இதனையும் நான்கு பிரதான பிரிவுகளாக விற்பனைக்கு விட்டுள்ளது.
ஒவ்வொரு பதிப்பிலும் அவ்வவற்றிற்குரியவாறான அடொபி மென்பொருள்களின் CS4 பதிப்புகள் காணப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு ...
மேலும் வாசிக்க →
அடொப்நிறுவனம் தனது இணைய வடிவமைப்பு மென்பொருளான Adobe GoLive இன் மேம்பாட்டினையும் விற்பனையையும் 28.04.2008 இல் இருந்து பூரணமாக நிறுத்தியுள்ளது. தனது Adobe Dreamweaver மென்பொருளில் பூரண கவனத்தினை செலுத்துவதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு GoLive பயனாளர்கள் Dreamweaver இற்கு மாறிக்கொள்ளுவதற்கு சலுகை விலையில் அம்மென்பொருளை வழங்கவும் முன்வந்துள்ளது.
அடொப் நிறுவனம் மக்ரோமீடியா நிறுவனத்தை வாங்க முன்னர், GoLive மட்டுமே அவர்களது இணைய வடிவமைப்பு மென்பொருளாக இருந்தது.
மேலும் வாசிக்க →
அடொப் நிறுவனம் ஏறத்தாள ஒரு வருட காலமாக சொல்லி வந்த Adobe Photoshop Express இனை பீற்றா பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது எந்த ஒரு பிளாஸ் Plugin உள்ள இணைய உலாவியிலும் செயற்படக்கூடியது. இதன்மூலம் இணையத்திலிருந்த படியே எங்களது புகைப்படங்களை மேம்படுத்தி சேமித்து வைத்துக்கொள்ளுவதோடு அதனை இலகுவாக மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு அடொப் நிறுவனம் இலவசமாக இரண்டு Gb இட அளவினையும் இதற்காக வளங்குகின்றது.
இங்க சொடுக்கி போய் பாருங்க.
மேலும் வாசிக்க →
நான் உருவாக்கின Flash Tooltip component ஒண்டை சில நாட்களுக்கு முன் தரவிறக்க தந்திருந்தனான். ஆனா சிலவேளைகளில அதை என்னெண்டு பாவிக்கிறது எண்டு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தா அதுக்காகத்தான் இந்த பதிவு. இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.
முதலில நீங்கள் இன்னமும் அதை தரவிறக்காமல் இருந்தால் போய் தரவிறக்கி உங்கட கணினியில நிறுவிக்கொள்ளுங்கோ. உங்களிட்ட கட்டாயம் Adobe Extension manager இருக்க வேணும். நிறுவினா கீழ இருக்கிற மாதிரி ...
மேலும் வாசிக்க →
ஏறத்தாள ஒரு வருட கால பீற்றா மற்றும் அல்பா சோதனைகளின் பின்னர் அடொப் நிறுவனம் சற்று முன்னர் தனது Adobe AIR 1.0 இனை வெளியிட்டுள்ளது.
HTML, AJAX, Flash and Flex போன்ற இணைய மென்பொருள் உருவாக்க திறமை உள்ளவர்கள் Adobe AIR இனை பயன்படுத்தி அவற்றை தமது கணினியில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இங்க போய் AIR இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க →