Archives
All Posts Tagged
Tag: ‘தமிழ்’

அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்

இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,
counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் …

Read More

வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.
ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.
நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். …

Read More

சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது??

நீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.
இது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.
நான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது …

Read More

வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.

நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை …

Read More

நுட்பம் – 2006

கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.
மலைபோல்
இடர்வரினும்
தலைநிமிர்ந்து நிற்போம்
நாங்களும் – எங்கள் கலைகளும்
எம் பனைகளைப்போலவே..
உள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய …

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது