பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும். இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். அவர் எழுதியிருந்த சில பழந்தமிழ் சமைய …
கவிஞர்கள்
இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.
கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். …
ஈழத்து இலக்கிய வழி
இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.
தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு …
இரு கவிராயர்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இலக்கிய வழி எனும் நூலில் (திருத்தப்பதிப்பு – 1964) இருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல்களை ருசித்துப்பாருங்கள்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வேட்டைத்திருவிழாவினை பற்றி முத்துக்குமார கவிராயர் பாடிய இந்த பாடலை பாருங்கள்.
முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை …

பின்னூட்டங்கள்