Posts Tagged "பதிவு"

வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.

நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.

இதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.

23 ஆனி, 2007

பிறந்த கதை

ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.
இப்ப இந்த கொழும்பில அகப்பட்டு நிக்கிறது சரியான கஸ்டமாக் கிடக்கு. தயவு பண்ணி ஏதாவது குறிப்புகள் போடுங்கோ.
26 புரட்டாதி, 2006