Posts Tagged "அடொபி"

Adobe Project ROME

அழகான ஓவிய வேலைப்பாடுகள் மற்றும் அசைபடங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் கூடிய ஒரு மென்பொருள்தான் Adobe Project ROME. AIR இனை பயன்படுத்தி இயங்கும் இம்மென்பொருள் இப்போதைக்கு இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது.

rome logo

மிக மிக இலகுவான வடிவமைப்புடன் வேகமாக இயங்கும் வகையில் இது தயார் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்கியவற்றை போன்ற கோப்புக்களாக உங்களால் சேமித்துக்கொள்ள முடியும்.

rome interface

போட்டோசொப் போன்ற பெரிய மென்பொருள்களை பயன்படுத்த சிரமப்படுபவர்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி இலகுவாக பலவிதமான கிரபிக்ஸ் வேலைகளை செய்து கொள்ளமுடியும்.

rome open

அத்தோடு நாம் உருவாக்கும் வேலைகளை ரெம்ளெற்றுகளாக இலகுவாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருப்பது சிறப்பானது. இதன்மூலம் மற்றவர்களின் உருவாக்கங்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வசதி உண்டு.

rome exchange

மேலும் தகவல்களுக்கும் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளவும் இங்கே செல்லுங்கள்.

29 ஐப்பசி, 2010

நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial

நான் இணையத்தை சுத்திவரேக்க இந்த Tutorial கண்ணில பட்டுது. ஒரு புதிய மனித உருவத்தை போட்டோ சொப்பில் உருவாக்க நானும் எவ்வளவோ வழிகளை பார்த்திருக்கிறன். ஆனா இந்த வழிமுறைபோல இலகுவான ஒரு முறையை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் கீழே காட்டியிருக்கிற படத்தை உருவாக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலந்தான் எடுத்துது. ஒரு நல்ல போட்டோசொப் பயனாளருக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை. இன்னும் கொஞ்சநேரம் செலவழித்திருந்தால் தலைமயிரைக்கூட மாற்றியிருக்க முடியும்.

சரி இங்க சொடுக்கி தொடங்குங்க வேலையை.

18 மாசி, 2008