Posts Tagged "அப்பிள்"

அப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை

சாதாரணமாக அப்பிள் கணினிகளில் தமிழில் உள்ளீடு செய்ய தமிழ்99 மற்றும் அஞ்சல் எழுத்துரு வடிவமைப்பு முறைகளே காணப்படும். நான் அவை இரண்டையுமே பயன்படுத்துவதில்லையாகையால் அப்பிள் கணினி வாங்கிய புதிதில் (2007இன் ஆரம்பத்தில்) எனக்கென பாமினி முறையில் யுனிக்கோட் உள்ளிடுவதற்கான விசைப்பலகை ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் அது பல வழிகளில் ஒரு பூரணப்படுத்தப்படாததாகவே இருந்து வந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் இப்பொழுது அதனை மேம்படுத்தி அனைவரும் பயன்படுத்துமளவிற்கு பூரணப்படுத்தியுள்ளேன். நீங்களும் கீழுள்ள தொடுப்பில் சொடுக்கி தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.

குறிப்பிடத்தக்க விடயங்கள்

ஸ்ரீ (S+R U+0BB8 U+0BCD U+0BB0) இற்கு பதிலாக சரியான ஶ்ரீ (SH+R U+0BB6 U+0BCD U+0BB0) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கங்கள்
தமிழ் இலக்கங்கள் CABS உடன் சேர்த்து எண் விசைகளை சொடுக்கும்போது வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரணமாக இலக்கங்களும் SHIFT உடன் நெடில் எழுத்துக்களும் உள்ளிடப்படுவது மாற்றமின்றி உள்ளது.) அதிக இலக்கங்கள் காரணமாக சைபர் ஆனது ஒன்றிற்கு முன்னும், சைபர் இடத்தில் பத்தும், கழித்தல் அடையாளம் வருமிடத்தில் நூறும், சமன் அடையாளம் வருமிடத்தில் ஆயிரமும் வைக்கப்பட்டுள்ளன.

சைபர் – – CABS+`
ஒன்று – – CABS+1
இரண்டு – – CABS+2
மூன்று – – CABS+3
நான்கு – – CABS+4
ஐந்து – – CABS+5
ஆறு – – CABS+6
ஏழு – – CABS+7
எட்டு – – CABS+8
ஒன்பது – -CABS+9
பத்து – – CABS+0
நூறு – – CABS+-
ஆயிரம் – – CABS+=

தமிழ் குறியீடுகள்
தமிழிலுள்ள அனைத்து குறியீடுகளும் இன்னமும் சேர்க்கப்படவில்லையாயினும் – நாள், மாதம், வருடம், செலவு, வரவு, மேற்படி, ரூபாய், இலக்கக் குறியீடு மற்றும் நீளக் குறியீடு என்பன சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் CAPS உடன் Q இல் தொடங்கி உள்ளன.

௳ ௴ ௵ ௗ ௶ ௷ ௸ ௹ ௺

நிறுவுதல்

தரவிறக்கிக்கொண்ட ஸிப் கோப்புறையினுள் இருக்கும் இரண்டு கோப்புகளையும் ~/Library/Keyboard Layouts இனுள் பிரதிசெய்து சேர்த்துவிடுங்கள். இப்பொழுது System Preferences–>international இல் இவ்விசைப்பலகையை தேர்வுசெய்து கொள்ள முடியும். சிலவேளைகளில் உங்கள் கணினியை மீள இயக்க வேண்டி இருக்கும்.

மேம்படுத்தல்

கீழே பின்னூட்டத்தில் அமலன் கேட்டவாறு விசைப்பலகை இப்போது சுருக்க விசைகள் வேலை செய்யக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதனை முன்னரே நிறுவியிருந்தால் மீளவும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கம்

கீழே சொடுக்கி விசைப்பலகையினை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Bamini Keyboard Layout (2902 downloads)

பயனுள்ளதெனி்ன் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

1 ஆடி, 2011

ஐபோன் கார்ட்டடூனில்

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.

25 ஆனி, 2007

ஐபோன் இணைய உலாவி

மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் கணினிகள் கொண்டிருக்கின்ற வசதிகளை கொண்ட safari இணைய உலாவியை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வசதிகளை கொண்டிருக்கும் என Macrumors வரிசைப்படுத்தி உள்ளது. அத்தோடு அது என்ன விதமான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டுப்பாடுகளை மட்டும் கீழே பாருங்கள்.

  • 10MB max html size for web page
  • Javascript limited to 5 seconds run time
  • Javascript allocations limited to 10MB
  • 8 documents maximum loaded on the iPhone due to page view limitations
  • Quicktime used for audio and video

மேலதிக தகவல்களுக்கு இங்கே வாருங்கள்.

20 ஆனி, 2007