Posts Tagged "blogger"

விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா

இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)



மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

20 மார்கழி, 2006

புளொக்கருக்கு ஒரு Chat

எறத்தாள ஒரு மாதத்தின் முன்னரே plugoo இனை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுத்தான் அதனைபயன்படுத்துவதற்குரிய அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது. அதனை நிறுவி சோதித்த உடனேயே அதன் வசதிகளும் பயன்களும் மற்ற எந்த chat engine இனையும் விட என்னை மிகவும் கவர்ந்து விட்டது. (ஊரோடி மைதானத்தில் இப்போதும் Chatango இனை சோதித்து வருகின்றேன்.)

இதிலுள்ள முக்கிய பயன் என்னவெனில் எங்களால் இதனை எங்கள் வழமையான chat client உடன் இணைத்து பயன்படுத்த முடியும். நான் இதனை எனது GTalk உடன் இணைத்துள்ளேன். இதனால் நான் எனது மின்னஞ்சலை பாரக்கும் போதெல்லாம் என்னால் plugoo ஊடாக chat பண்ண முடியும். அனேகமாக நான் online இல் இருக்கும் போதெல்லாம் மின்னஞ்சலில் உள்நுழைந்திருப்பதால் இணைய வசதி குறைந்த இடத்தி்ல் இருக்கும் எனக்கு இது ஒரு வரப்பிரசாதமே.

இதனை உங்கள் பதிவிலும் பயன்படுத்த விரும்பினால் உடனே plugoo இணையத்திற்கு சென்று பதிந்து கொள்ளுங்கள். அது இன்னமும் பேற்றா நிலமையிலேயே இருப்பதால் உங்களுக்கு அழைப்பிதழ் கிடைத்ததும் இதனை உருவாக்கி கொள்ள முடியும். அத்தோடு எனக்கும் ஒரு அழைப்பிதழை அனுப்பும் வசதி உள்ளது. தேவையெனில் ஒரு பின்னூட்டமிடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.

20 மார்கழி, 2006

புளொக்கர் சில வித்தைகள் – 3

சில பதிவுகளில் Header இற்கு பதிலாக ஒரு விரும்பிய படத்தினை இணைத்திருப்பதனை கவனித்திருப்பீர்கள். இது புளொக்கரில் சுலபமாயினும் புளொக்கர் பேற்றாவில் சிறிது கஸ்ரமே. நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஒரு படத்தினை Header image ஆக சேர்க்க விரும்பின் கீழே காட்டப்பட்ட நிரலியை பொருத்தமான இடத்தில் சேர்த்து விடுங்கள் (Body tag இன் கீழே)

ஒரு படத்தினை இணைத்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

16 மார்கழி, 2006