கூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும்.
திரைவெட்டுகளை பாருங்கள்.
புதிய யாகூ அரட்டை
நீண்ட காலமாக இணையத்தில் முடிசூடா அரட்டை அரசனாக இருந்த யாகூவினை மெல்ல மெல்ல ஜிமெயிலின் அரட்டை மென்பொருள் வீழ்த்தத்தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கூகிளின் அரட்டை மென்பொருள் பதிவிறக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்ததும் அது தனது மின்னஞ்சலுடன் இணைந்து வேலை செய்ததும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இப்போது யாகூவும் தனது அரட்டை மென்பொருளின் இணைப்பதிப்பை வெளியிட்டிருக்கின்றது. போய்பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.
யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்
மாசி 2006 இல் கூகிள் நிறுவனம் இலகுவான, இணைய உலாவியினுள்ளேயபயன்படுத்தக்கூடிய தனது Gmail chat இனை அறிமுகப்படுத்தியது. இப்போது 2007 மாசியில் யாகூ தனது அரட்டை மென்பொருளை Yahoo Mail Beta உடன் இணைத்திருக்கின்றது.
அனேகாமாக இன்னும் சில தினங்களில் இது அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வந்து விடும். இதன் மூலம் தனது அரட்டை மென்பொருளின் பயனாளர்களின் எண்ணிக்கையை (தற்போது 73 மில்லியன், யாகூ மின்னஞ்சல் 250 மில்லியன்) அதிகரிக்க முடியும் என யாகூ நம்புகின்றது.
அது சரி Yahoo Mail …

பின்னூட்டங்கள்