Posts Tagged "CSS help sheet"

CSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் – II

முன்னரே கூறியது போன்று எனது CSS ஒஆரம்ப வழிகாட்டி மின்னூலின் பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

17 ஆடி, 2008

CSS – ஆரம்ப வழிகாட்டி தமிழில்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க விட்டிருந்தேன். ஆது CSS தெரிந்தவர்களுக்கு ஒரு உசாத்துணையாக மட்டுமே இருக்கும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை தரவிறக்கிய பலரும் CSS இற்கு புதியவர்களாக இருந்தமையினால் CSS இனை ஆரம்பித்தில் இருந்து கற்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இலகுவான குறிப்புகள் ஏதும் இருந்தால் அதனை தருமாறும் கேட்டிருந்தார்கள்.

அதனைத்தொடர்ந்து CSS கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக தமிழில் CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி என்கின்ற குறிப்புப்புத்தகத்தினை எழுதியிருக்கின்றேன்.

இந்த குறிப்புபுத்தகம் CSS பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட CSS இனை தாங்களாகவே கற்று உபயோகப்படுத்தக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கின்றது, தரவேற்றுவதில் உள்ள இணைய சிக்கல் காரணமாக இதனை நான் மூன்று பாகங்களாக பிரித்துள்ளேன். முதற்பாகத்தை கீழே சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அல்லது உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். (தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்) மற்றைய பாகங்களையும் தரவேற்றுகிறேன்.

[download#1#image]

பாகம் – 2

[download#2#image]

இதனை நீங்கள் உங்கள் சொந்த தேவைக்கன்றி வேறு எந்த விதத்திலாயினும் பயன்படுத்துவதாக இருப்பின் மின்னஞ்சல் மூலமோ அல்லது பின்னூட்டம் மூலமோ முன் அனுமதி பெறல் வேண்டும்.

12 ஆடி, 2008

CSS உதவிப் பக்கங்கள் – நீங்கள் இணைய வடிவமைப்பாளரா?

இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டியவற்றில் ஒன்று CSS. மிக இலகுவாக இணையப்பக்கங்களை அழகுபடுத்த இது உதவுகின்றது. நான் எழுதிவரும் வேர்ட்பிரஸ் தொடரிலும் theme வடிவமைப்பின் போது CSS பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு அதனை இலகுவாக சொல்லவும், CSS கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்களுக்கும், மற்றும் CSS இனை இலகுவாக கையாளவும் நான் உருவாக்கி இருக்கின்ற இந்த CSS HELP SHEET உதவியாக இருக்கும்.

தரவிறக்கி பாருங்கள். பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

[download#3#image]

19 ஆனி, 2008