Posts Tagged "get simple"

நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாத இலவச CMS கள்

Content Management system (CMS) கள் எனப்படுபவைகள் மிக இலகுவாக இணையத்தளம் ஒன்றை நிருவகிக்க உதவி செய்பவை. இவற்றிற்கான மிக அடிப்படையான உதாரணம் blogger இலவச சேவை. இப்படியான ஒரு CMS இனை பயன்படுத்துவதன் மூலம் எங்களினால் மிக இலகுவாக எமது இணையத்தளத்தினை இலகுவாக நிருவகிக்க முடிவதுடன், இலகுவாக உள்ளடக்கங்களை எழுதி வெளியிடவும் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

மிகப்பிரபலமான CMS கள் என்ற வகையில் வேர்ட்பிரஸ், ஜூம்லா மற்றும் ட்ருபல் போன்றவை அமையும். இவை பற்றியே பலரும் கதைப்பதாலும் எழுதுவதாலும் நாங்கள் வேறு CMS கள் பற்றி அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இப்பதிவிலே நான் நீங்கள் அதிகம் கேட்டிராதவைகளை வரிசைப்படுத்தியிருக்கின்றேன். பாருங்கள். நூற்றுக்கணக்கான CMSகள் இருக்கின்ற போதும் இவை நான் நிறுவி பரிசோதித்து பார்த்தவையில் சிறந்தவை.

ஏன் நாங்கள் வேறு CMS களை பற்றி அறிய வேண்டும் என்கின்ற கேள்வி உங்களிடம் எழுமானால் அதற்கான முக்கிய காரணமாக அமைவது, அவை எல்லா நேரத்திலும் அவை பயனுள்ளவையாக அமைவதில்லை என்பதுதான். உதாரணமாக ஜூம்லா போன்ற பெரியதொரு CMS இனை ஒரு சிறிய ஆலயம்த்திற்கான இணையத்தளத்திற்கு பயன்படுத்துவதென்பது தேவையற்றது. அவை எமது வழங்கிக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதோடு எமக்கு தேவையற்ற பல வசதிகளையும் வழங்குகின்றன. அப்படியான ஒரு சிறிய இணையத்தளத்திற்கு நாங்கள் ஒரு சிறிய CMS இனை பயன்படுத்துவதே சிறப்பானதும் இலகுவானதுமாகும்.

1. GET SIMPLE

இது ஒரு மிக இலகுவாக கையாளக்கூடிய XML இனை அடிப்படையாக கொண்ட திறந்த மூலநிரல் CMS ஆகும். இது XML இனை தரவு சேமிப்பிற்கு பயன்படுத்துவதால் உங்களுக்கு ஒரு தரவுத்துளம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. ZINE

ZINE பைத்தன் மொழியில் எழுதப்பட்ட திற மூலநிரல் CMS. இது களத்திற்கு புதிதென்றாலும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கபட்டிருக்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது இயங்க உங்கள் வழங்கியில் பைத்தன் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமானது. துரதிஸ்டவசமாக அனேகமான மலிவான இணைய வழங்குனர்கள் இவ்வசதியை வழங்குவதில்லையாகையால் நீங்கள் உங்கள் இணைய வழங்குனரை தேர்வுசெய்தவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

3. COUCH CMS

மிக மிக இலகுவான PHP மொழியலமைந்த ஒரு CMS இதுவாகும். உங்களது எந்த HTML வடிவமைப்பையும் இலகுவாக இந்த CMS இனை கொண்டு நிருவகிக்க முடியும். கற்றுக்கொள்வது என்று இங்கு எதுவும் இல்லை.

4. CONTAO

இதுவும் ஒர திற மூலநிரல் CMS ஆகும். CSS மொழியினை கொண்டு இலகுவாக வடிவமைப்புகளை மேற்கொள்ள கூடியதாக இருப்பதும் படிவங்கள், நாட்காட்டி போன்ற வசதிகளை உள்ளடக்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கவையாகும்.

5. HABARI

உங்கள் இணைய வழங்கிக்கு அதிக சுமை கொடுக்காத CMA களில் ஒன்று HABARI. எந்தஒரு தரவுத்தளத்தையும் நீங்கள் இதனுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. FROG CMS

மிக மிக இலகுவான CMS களின் ஒன்றான இது சிறிய இணையத்தளங்களை சிறப்பாக நிருவகிக்க உதவக்கூடியது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனியான வார்ப்புருக்களை உருவாக்கக்கூடியதாய் இருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று,

7. PIXIE CMS

இதுவும் ஒரு இலவசமான திற மூலநிரல் CMS ஆகும். மிக இலகுவாக சிறிய இணையத்தளங்களை உருவாக்கி நிருவகிக்க உதவும்.

8. LOCOMOTIVE

ruby on rails இனை அடிப்படையாக கொண்ட மிகவும் பாதுகாப்பு மிகுந்த ஒரு CMS இதுவாகும். இது இலவசமான திறமூலநிரலை கொண்டுள்ள போதும் இதனை உங்கள் இணைய வழங்கியில் நிறுவ உங்களிடம் rails நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிக அழகான CMS களில் ஒன்று இது.

9. RADIANT CMS

இதுவும் ruby on rails இனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு திற மூலநிரல் CMS. பாதுகாப்பானதும் இலகுவாக வார்ப்புருக்களை உருவாக்க முடிவதும் இதன் சிறப்புக்களாகும்.

உங்களிடம் ஏதும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் அல்லது இங்கே கேளுங்கள்.

29 தை, 2011