கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன.
புதிய நட்சத்திர குறிகள்
நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய மின்னஞ்சல்களை நட்சத்திரமிட்டு வைக்க இந்த வசதி கைகொடுத்து வந்தது. ஆனால் அதிகளவான மின்னஞ்சல்கள் நடசத்திரமிடப்படும்போது அவற்றில் முக்கியமானவற்றை கண்டு பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு தீர்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரட்டையில் படங்கள்.
ஜிமெயில் சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒன்று அரட்டை. அதில் மிக முக்கியமான ஒரு வசதியை ஜிமெயில் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இதன்மூலம் அரட்டை செய்பவரின் புகைப்படம் கீழ்காட்டப்படவாறு அரட்டை வின்டோவில் தெரியும்.
இலகுவான தொடுப்புக்கள் அமைக்கும் வசதி
இதன் மூலம் நாம் அடிக்கடி ஜிமெயிலில் செய்யும் வேலைகளுக்கு குறுக்கு வழியொன்றை (Shortcut) ஒன்றினை அமைத்துக்கொள்ள முடியும்.
18 ஆனி, 2008