Posts Tagged "laptop"

Apple announced new Macbooks.

அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணினிகளை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. முழுவதுமாக அலுமினியத்தால் இதன் வெளிப்புறம் உருவாக்கப்பட்டுள்ளது. லெப்பேர்ட் இயங்குதளத்துடனும் ஐலைவ் 8.0 பதிப்புடனும் வெளிவந்திருக்கும் இந்த மடிக்கணினி, மடிக்கணினி வாங்க நினைப்பவர்களுக்கு சரியான தெரிவாக இருக்கும். இது இரண்டுவித வன்பொருள் தெரிவுகளுடன் வெளிவந்திருக்கின்றது.

Intel Core 2 Duo 2.0 GHz processor
2GB DDR3 Memory
160GB hard drive
NVIDIA GeForce 9400M graphics
Price – 1300 US $

Intel Core 2 Duo 2.4 GHz
2GB DDR3 Memory
250GB hard drive
NVIDIA GeForce 9400M graphics
Price – 1600 US $

இதைவிட முன்னைய வெள்ளை நிற மக்புக்கினையும் குறைந்த விலைக்கு அப்பிள் மீள அறிமுகப்படுத்தி உள்ளது.

Intel Core 2 Duo 2.1 GHz processor
1GB DDR2 Memory
120GB hard drive
Intel GMA X3100 graphics
Price – 1000 US $

அப்பிளின் வேகம் கூடிய மடிக்கணினியான மக்புக் புரோ மடிக்கணினிகளும் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

15 ஐப்பசி, 2008

அனைவருக்கும் மடிக்கணினி

அனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.

இதன் பிரதான விடயங்கள் வருமாறு

  • Intel® Celeron 1.5 GHz CPU
  • 14″ Widescreen X-bright LCD
  • 256 MB Ram memory
  • 40 GB Hard Drive
  • 802.11g Wireless LAN
  • Optimized Linux operating system
  • Pre-installed office and multimedia applications

மேலதிக விடயங்களுக்கு அவர்களின் இணையத்தளத்தை பாருங்கள்.

28 ஆடி, 2007