மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.
கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).
மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற ...
மேலும் வாசிக்க →
அம்மாநண்பர்கள் என்னைத் தேடி வந்துகதவில் தட்டும்போதெல்லாம்நீ வெம்பிக் கண்ணீர் மல்குதைஎண்ணி நான் வேதனைப்படுகிறேன்ஆனால்வாழ்க்கையின் சிறப்புஎன் சிறையில் பிறக்கிறதென்றுநான் நம்புகின்றேன் அம்மாஎன்னை இறுதியில் சந்திக்க வருவதுஒரு குருட்டு வெளவாலாய்இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்அது பகலாய்த்தான் இருக்கும்அது பகலாய்த்தான் இருக்கும்.(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)
மேலும் வாசிக்க →
பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காகமேன்மைமிகுமேன்மை மிகு தேசமேஇருள் மிகுந்த பெருந்துயர் இரவில்திரிகைக்கல் சுழலலாம்மேலும் சுழலலாம்ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்குஅவற்றால் இயலாஅவை மிகச் சிறியன.ஓ பெரிய தேசமேஓ ஆழமான காயமேதனிப்பெரும் காதலேநசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்துஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்துதிருடப்பட்ட உன் முறுவலில் இருந்துதிருடப்பட்டஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்துசிதைவுகளிலிருந்துசித்திரவதைகளில் இருந்துஇரத்தம் உறைந்த சுவர்களில் இருந்துவாழ்வினதும் மரணத்தினதும்நடுக்கங்களில் இருந்துபுதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.அது ...
மேலும் வாசிக்க →
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் ...
மேலும் வாசிக்க →
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றிஎப்போதும் நான் சிந்தித்ததில்லைஆனால்கவிதைகள் எனக்கு பிடிக்காமல்போனபோது கொஞ்சம்யோசித்துப்பார்த்தேன்கவிதைகளை எனக்குமிகவும் பிடித்திருந்ததுஅப்போது நான்கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லைகவிதைகள் என்றால்புல்லரிக்கும் எனக்குஅப்போதெனக்குகவிதைகள் புரிவதேயில்லை.கவிதைகள் புரியத்தொடங்கியபோதுகவிதையே வாழ்க்கையானதுகவிதைகளை நான்கிறுக்கத் தொடங்கிய போதுதான்கவிதைகள் கொஞ்சம்உதைக்கத் தொடங்கியதுகவிதைகளை நான்யோசித்தபோதுகவிதைகள் எனக்குவெறுக்கத் தொடங்கியதுகவிதைகள் எனக்குள்தானாய் வந்தபோதுகவிதைகள் எனக்குசுத்தமாய் பிடிக்காமல் போனது.ஏனென்றால் கவிதைகள்உண்மைகளை சொல்லிவிடுகின்றனஎனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றிநான் சிந்திப்பதேயில்லை.
மேலும் வாசிக்க →