PollDaddy இனை வாங்கியது Automattic
வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வெளியிட்டுவரும் Automattic நிறுவனம் இணையத்தில் வாக்கு மற்று சேவே உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் ஐரிஸ் நிறுவனமாகிய PollDaddy நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Automattic நிறுவனத்தில் கொள்கைகளுக்கு அமைவாக PollDaddy நிறுவனம் வாங்கப்பட்டிருப்பதால் அது தொடர்ந்தும் தனியான ஒரு நிறுவனம் போலவே செயற்படும். இந்த இணைப்பு வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளுக்கு மேலும் ஒரு வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Automattic நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பின் பிரகாரம் இந்நிறுவனம் விரைவில் வேர்ட்பிரஸிற்கான PollDaddy நீட்சி ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் Automattic தன்னுள் இணைத்துக்கொண்ட இரண்டாவது நிறுவனம் இதுவாகும். மிக அண்மையில் பதிவு பின்னூட்டமிட உதவும் நீட்சியான IntenseDebate இனை Automattic நிறுவனம் வாங்கியிருந்தது.