நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம்.

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு இலங்கை நிறுவனத்தின் ஒழுங்கு படுத்தலில் பல்வேறு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் இந்நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு களைகட்டியிருந்தது. பல்வேறு சமய மற்றும் சமூகப்பெரியார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு யாழ் அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஆசியுரை வழங்கும் நல்லை ஆதீன இரண்டாம் குருமகா சந்நிதானம் சிறீல சிறீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

செயல்திறன் அரங்க இயக்கம் வழங்கிய நாடகத்திலிருந்து…
17 ஆனி, 2008

இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.

இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. முதல் முறையாக சர்வதேச தரத்திலான நிற உடைகள், மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் என களைகட்டியிருந்தது போட்டி. கீழே கைப்பேசியில் எடுத்த சில படங்கள். மேலும் சில படங்கள் விரைவில். (படங்களை தரவேற்றிறது பெரிய சிக்கலாயிருக்கப்பா…)
12 வைகாசி, 2008

இந்துக்களின் யுத்தம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும்

விபரங்களுக்கு

Score card க்கு

30 பங்குனி, 2008