நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

ஆறுமுக நாவலர் – பிறந்த தினம்

“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே” என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய; செய்யுள் வடிவிலிருந்த தமிழிலக்கியத்தினை கற்றோரும் மற்றோரும் உணரும்படி செந்தமிழ் உரைநடை வடிவிற்கு மாற்றி தமிழிற்கு பரோபகாரம் செய்த நல்லை நகர் ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்றாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலே பிறப்பெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தை விருத்திசெய்து, பொதுமக்கள் எல்லோருக்கும் புலப்படக்கூடிய ஒரு உரைநடையினை உருவாக்கி அதன் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் ஆறுமுக நாவலர் அவர்கள். ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் அவர்கள் தனி ஒருவராய் தமிழ் உரைநடைக்கு செய்த பரோபகாரம் என்றும் நினைவில் கொள்ளப்படவேண்டியது. இவருடைய சைவவினாவிடைகள் இன்றுவரை சைவச்சிறார்களுக்கும் பெரியோருக்கும் வேதங்களாய் நின்று விளங்குகின்றன.

இவர் எழுதிய உரைநடை நூல்களுள்ளே குறிப்பிடத்தக்கவை பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கோயிற்புராண உரை முதலியன. இவர் இயற்றிய கண்டன நூல்கள் சுப்பிரபோதம், வச்சிரதண்டம் முதலியன. இவைதவிர சைவசமயத்தின் சிறப்புக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக எழுதிய யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்டுரை என்பனவும் இவரின் உரைநடைச் சிறப்பை எடுத்தியம்பிய வண்ணம் உள்ளவை.

இன்று நாவலர் பெருமானுடைய குருபூசை நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே விசேட பூசை வழிபாடுகளுடன் வெகு சிறப்பாக விமர்சையாக நடைபெற்றது.

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கக்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது
மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம்.
– சிறீல சிறீ ஆறுமுக நாவலர்.

18 மார்கழி, 2006

யாழிலிருந்து கிளம்பிடும் வீரம்

திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.

கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி “கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை” என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே? என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.

அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? அஞ்சி அயராதீர்கள் – அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின

13 மார்கழி, 2006

நண்பரின் திருமணம்

வாழ்த்துச்சொல்லுங்கள். நன்று வாழ.

8 கார்த்திகை, 2006