யாழ்ப்பாணம்

சந்நிதி தேர்

இண்டைக்கு சந்நிதி தேர். றோட்டெல்லாம் ஒரே தண்ணீர் பந்தல்களும் சந்நிதி போட் போட்ட பஸ்களும். எனக்கு போக விருப்பம்தான் இருந்தாலும் நேரமில்லை. இண்டைக்கு அலுவலக விசயமா நெல்லியடி போகவேண்டி இருந்துது. அப்ப வழியில கண்ட தூக்குக் காவடி. நீங்களும் பாருங்கோவன்.




28 ஆவணி, 2007

நல்லூர் திருவிழா

நாளைக்கு 10 மணிக்கு கொடியேற்றத்தோட நல்லூர் திருவிழா தொடங்குது. நாளைக்கு சனிக்கிழமை எண்ட படியால் பிரச்சனை இல்லை சரியா நேரத்துக்கு ஒரு விசிற் போகலாம். ஊரடங்கு நேரம் அப்படியேதான் இருக்கிறதால என்ன மாதிரி திருவிழா நேரங்கள் எண்டு தெரியேல்ல பாப்பம். முடிஞ்சா முக்கியமான திருவிழாக்களை எண்டான்ன போட்டோ எடுத்து போடுறன். அங்க இருந்து ஒரு கும்பிடு போடுங்கோவன்.

முக்கியமான விசயம் என்னெண்டா ஐஸ்கிறீம் கடைகளும் போட்டுட்டாங்கள்.

19 ஆவணி, 2007

கொடியேற்றம்.

நல்லைக்கந்தன் கொடியேற்றம் வழமையான கலகலப்பில்லாவிட்டாலும் வெகு விமர்சையாக இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வழமையான மக்கள் கூட்டம் இல்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கோயிலிலே கூடியிருந்தார்கள்.

சரி கொஞ்சப்படங்களை பாருங்கோவன்
பிரதான வாயில்

தெற்கு வாயில்

கொடிமரம்

பிரதட்டை செய்யும் அடியார்கள்

கற்பூரம் கொழுத்தும் இடம் (கோயிலுக்கு வெளியே)

19 ஆவணி, 2007