என்ன அலட்டலாம்…….

இந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே “மக்றோமீடியா பிளாஸ்” பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் “வியூச்சர் பிளான்” எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் ஒரே இடத்தில கொட்டுவம். இருந்தாலும் யாழப்பாணம் போனாத்தான் கணனியில கிடக்கிற புகைப்படங்களை எடுக்கலாம். அதுவரைக்கும் நெஞ்சில் நின்றவை எண்டு ஏதாவது அலட்டுவம் எண்டு நினைக்கிறன்

27 புரட்டாதி, 2006

பெயர் வைத்த கதை ???

இது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன்.

இப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ தெரியேல்ல

பசி

அவனுக்கு உடம்பில்
அவளுக்கு வயிற்றில்
பரிமாறிக்கொண்டார்கள்.

27 புரட்டாதி, 2006

பிறந்த கதை

ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.
இப்ப இந்த கொழும்பில அகப்பட்டு நிக்கிறது சரியான கஸ்டமாக் கிடக்கு. தயவு பண்ணி ஏதாவது குறிப்புகள் போடுங்கோ.
26 புரட்டாதி, 2006