யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்



என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து வருமா?? அல்லது வராமல் விட்டிடுமோ?? வரவேணும்.

கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், சிறுகதைகள், நூல் அறிமுகம், கலைஇலக்கிய நிகழ்வுகள் எண்டு எல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கு.

புதுப்புனல் என்கிற பகுதியூடாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மிகச்சிறப்பாய் உள்ளது. இது மேலும் பலரை எழுதவும் வாசிக்கவும் வைக்கும்.

எழுத்துருக்களை பயன்படுத்துதலில இன்னும் சிறிய கவனம் வேண்டும் எண்டுறது என்ர எண்ணம். த. ஜெயசீலன் எழுதிய இரண்டு கவிதைகளையுமே வாசிக்க முடியேல்ல. என்னைப்பொறுத்தவரை எழுத்துரு அவ்வளவு மோசமா இருக்கு.

முதல் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதின “இன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு”. சிவத்தம்பி ஐயா கட்டுரையை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம் அவ்வளவு ஆங்கில சொல்லுகள் அடைப்புக்குறிகளுக்குள்ள. புகையிரத அமைச்சு ரெயில்வே எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட வேண்டிய தேவை எனக்கு விளங்கேல்ல. மற்றபடி இதை இன்னமும் விரிவா எழுதியிருந்தா எனக்கு இன்னமும் விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.

தாட்சாயணியின் கெடுபிடி சிறுகதையும், கொற்றை பி. கிருஸ்ணானந்தன் உடைய வல்லைவெளி கவிதையும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற கொன்வே பற்றி சொல்லுகின்றன.

நோயின் கொடுமையினால்
நொந்தவர் மயங்கிவிழ
“கொன்வோய்” போய்முடியத்
தொண்ணூறு நிமிடங்கள்
ஆவி பிரிந்ததனால்
“அங்கிருந்து” அனுப்பப்படும்
பூதவுடல்களும்
பொறுமைதனையிழந்து
கண்ணைத்;திறந்து
காரணத்தை கேட்கின்ற
அதிசயங்கள் நடந்தாலும்
ஆச்சரியமில்லை

என்கிறார் கிருஸ்ணானந்தன்.

பேராசிரியர் சபா. ஜெயராசா எழுதியிருக்கும் “நவீன கலை இலக்கியப்புலப்பாடுகள்” எண்ட கட்டுரையை இன்னொருக்கா வாச்சா என்ன சொல்லுறார் எண்டு விழங்கும் எண்டு நினைக்கிறன்.

க. திலகநாதன் தன் நாட்டிய சாத்திரம் – சில அரங்கக்குறிப்புகள் என்கிற கட்டுரையில அரங்க முறைமைகள் பற்றி விளக்குகிறார். நாட்டிய சாத்திரத்தில 6000 சூத்திரம் இருக்குதாம். அப்படியா???

அரண் கதை மூலம் அ. தனஞ்செயன் என்ன சொல்ல வாறார் எண்டு விளங்கேல்ல.

நூல் அறிமுகப்பகுதியில ஊடறு வெளியீடாக வந்த “இசை பிழியப்பட்ட வீணை” கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி நிச்சயமாக எனக்கு பயனுள்ள பகுதியாக இருக்கும். புத்தகங்களை தேடிக்கண்டுபிடிக்கிற வேலை குறையும்.

குப்பிளான் ஐ. சண்முகம் தனது பலதும் பாராட்டும் பத்தி பகுதியல நுண்கலைத்துறையின் கண்காட்சி பற்றி எழுதியிருக்கிறார். அதில் அவர்களுக்கு மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு இன்னமும் இல்லை என்று எழுதியிருக்கின்றார். அதற்கு கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளை உதாரணத்துக்கு இழுக்கின்றார். மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறுவதாயின் அதன் கருப்பொருள் நிச்சயமாக ஓவியர்களை தூண்டுவதாக இருக்கவேண்டும். அப்படியான கருப்பொருள்களை நினைப்பதே தடையாயிருக்க எங்கிருந்து வரும் ஓவியம் என்பதை அவர் எண்ணத் தவறிவிட்டார். இந்த கண்காட்சியை நான் பார்ப்பதற்கு சில நாட்களின் முன்னர் ஒரு ஓவியக் கண்காட்சியை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதனை விட இந்த கண்காட்சி பலமடங்கு சிறந்ததாக இருந்தது என்பது என் எண்ணம்.

25 தை, 2008

iconFinder.net

வளர்ந்து வருகின்ற சமூக இணைய சூழலில் iconfinder.net என்னும் இணையத்தளம் நிச்சயமாக குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய இணையத்தளமாகும். நீங்கள் ஒரு இணைய வடிவமைப்பாளராக இருந்தால் நிச்சயமாக இந்த தளம் உங்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.



இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு icon தேடுபொறியாகும். அத்தோடு இதன் தரவுத்தளத்தில் எவரும் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடியவாறு காப்புரிமை (Creative Commons, GPL, or LGPL) வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான icon சம்பந்தமான தரவுகள் உள்ளன. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.



அத்தோடு நீங்கள் Mac OS X பயனாளராக இருந்தால் அவர்களின் Dashboard Search Widget இனை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும்.



22 தை, 2008

Macworld 2008 keynote – live

அப்பிள் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த Macworld 2008 நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே அப்பிள் புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் பொருள் என்ன என்பதைப்பற்றியதான வதந்திகள் இணையத்தில் உலாவந்தவண்ணம் உள்ளன. iEye (camera), iCar என்பன கூட அவற்றில் அடங்கும்.




பார்வையாளர்கள்.



ஸ் ரீவ் மேடையில்




அப்பிள் இன்று

  • 9:24 am We want to give folks something for today. New software.
  • 9:23 am people are excited about the SDK that we will release in February
  • 9:23 am First quarter shipping, iPhone has got 19.5% of U.S. SmartPhone market (2nd behind RIM)
  • 9:21 am 20,000 iPhones per day average9:21 am 200th day since iPhone went on sale. 4 million sales
  • 9:21 am 2nd thing: iPhone
  • 9:20 am Now showing recent Mac/PC ad for Time Machine
  • 9:20 am 2 versions: 500 GB version – $299, 1 TB $499
  • 9:19 am Full Airport Extreme base station with “server grade” hard drive internal
  • 9:19 am Leopard feature: Time Machine. For notebooks, it doesn’t work so well because you have to constantly plug/unplug a hard drive. New product: Time Capsul



புதிய ஐபோன் மென்பொருள்
பழைய பயனாளர்களுக்கு மென்பொருள் மேம்படுத்துகை இலவசம். புதியவர்களுக்கு $20




iTune

  • 9:37 am iTunes Movie Rentals
  • 9:36 am 125 million TV shows sold. 7 million movies. Both are way above competitors, but did not meet expectations
  • 9:36 am 20 million songs sold in one day on Christmas day. New one-day record
  • 9:36 am 4 billion songs sold as of last week

எனிமேல் வீடியோவும்.

  • 9:38 am Every major studio is on board
  • 9:38 am Touchstone, Miramax, MGM, Lionsgate, Newline, FOx, WB, Disney, Paramount, Universal, Sony all on board



Apple TV 2




20th Century Fox chairman on the stage about movie rental



மூன்றாம் தலைமுறை MacBook Air உலகின் மிகமெல்லிய மடிக்கணினி.



  • Move a window by double-tap and move. Rotate a photo by pivoting your index finger around your thumb. Of course, pinch-zoom.
  • Multi-touch trackpad
  • display is LED backlit. iSight is built-in. MacBook-like keyboard, but with an ambient light sensor
  • Magnetic latch, 13.3″ widescreen display
  • MacBook Air is 0.16″ to 0.76″. The thickest part of the MacBook Air is thinner than the thinnest part of the Sony. It fits inside a envelope
  • We thought 3 lbs is a good target weight, but there was too much compromise with the other features






விலை $1799

16 தை, 2008