மலைநாடானுக்கு நன்றிகள்.

எல்லாற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில காட்டுப்படுறது என்றது பொதுவானது. ஆனா என்னுடைய ஊரோடி வானொலியில தெரிஞ்ச செய்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்பிடி தெரிய வைச்சவர் மலைநாடான். தனது இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சியில என்னுடைய இந்த பதிவை பற்றி அறிமுகம் செய்து வைச்சிருக்கிறார். இது நிச்சயமா என்னோடு வாசகர்களின்ர அல்லது விருந்தினர்களின்ர எண்ணிக்கையை கூட்டும் என்பது ஒருபக்கம் இருக்க நானும் ஏதோ எழுதிறன் எண்டு இரண்டு மூன்று பேராவது நினைக்கிறார்கள் எண்டு ஒரு சந்தோசம்.

மலைநாடானுடன் எனது பழக்கம் நிச்சயமாக மண்ணிலிருந்தே உருவானது என நினைக்கின்றேன். ஏனென்றால் எத்தனை பதிவுகள் இருந்தாலும் நான் முதலில் ஈழத்தவர்களின் பதிவு என்றால் உடன் சென்று வாசிப்பது வழக்கம். இதற்காக நான் யாரையும் வெறுக்கின்றேன் என்று அர்த்தமல்ல. அப்படி வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட நான் இருப்பதில்லை. இருந்தாலும் தமிழ்மணத்தின் முகப்பில் அந்த பெயர்களை கண்டவுடன் எனது விரல் தானாகவே அந்த தொடுப்புகளை சொடுக்கிவிடும். அப்படித்தான் மலைநாடானின் பக்கங்கள் எனக்கு தெரிய வந்தது, அவருக்கும் அவவாறு இருக்கக்கூடும். அதன்பின் ஜிமெயிலின் அரட்டை மூலம் சிலதடைவைகள் சுகம் விசாரித்திருக்கின்றோம். யாழ்ப்பாண செய்திகள் பரிமாறியிருக்கின்றோம். ஆனால் மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை. இப்படியான பழக்கம் மலைநாடானுடன் மட்டுமல்ல வேறு பல ஈழத்து பதிவர்களுடன்தான்.

சரி அப்பிடியே மலைநாடானின் அந்த நிகழ்ச்சியை கேட்க இங்கு சொடுக்குங்கள்.

20 பங்குனி, 2007

உலகின் மிகச்சிறிய flash memory

உலகின் மிகச்சிறிய flash memory இனை Kingmax நிறுவனம் kingmax’s USB 2.0 super stick எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த மிகச்சிறிய flash memory ஆக ஒரு கிராம் நிறையினையே கொண்டது.

இதன் நீள அகல உயரம் முறையே 34- x 12.4- x 2.2-mm. இது windows vista மற்றும் OS X இரண்டிற்கும் மிகுந்த ஒத்திசைவை காட்டக்கூடியிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 512MB(19$), 1GB(29$), 2GB(39$), 4GB(55$) ஆகிய கொள்ளவுகளை உடைய பதிப்புகளாக வெளிவிடப்பட்டுள்ளது.

17 பங்குனி, 2007

கூகிள் கைப்பேசி

கூகிள் நிறுவனத்தின் புதிய பொருளாக வெளிவர இருப்பது Google phone. இதைப்பற்றிய பல்வேறு கதைகள் இப்போது இணையத்தில் உலாவி வருகின்றன. கடைசியாக கூகிள் கைப்பேசியின் படம் கூட வெளிவந்து விட்டது நீங்களும் தான் பாருங்களேன்.

14 பங்குனி, 2007