புதிய யாகூ அரட்டை

நீண்ட காலமாக இணையத்தில் முடிசூடா அரட்டை அரசனாக இருந்த யாகூவினை மெல்ல மெல்ல ஜிமெயிலின் அரட்டை மென்பொருள் வீழ்த்தத்தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கூகிளின் அரட்டை மென்பொருள் பதிவிறக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்ததும் அது தனது மின்னஞ்சலுடன் இணைந்து வேலை செய்ததும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்போது யாகூவும் தனது அரட்டை மென்பொருளின் இணைப்பதிப்பை வெளியிட்டிருக்கின்றது. போய்பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.

5 வைகாசி, 2007

Graphs in Google Spreadsheet

சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.

கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.

கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.



25 சித்திரை, 2007

கண்களை நம்பாதீர்கள்

கீழே இருக்கின்ற இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பயங்கரமான முகமாயும் மற்றையது சாதாரண முகமாகவும் தெரிகின்றது. சரி இப்போது ஆசனத்தை விட்டு எழுந்து ஒரு 8 அடி பின்னால் சென்று திரும்பி பார்க்கவும் என்ன தெரிகின்றது.

அவை தங்களை இடம்மாற்றிக்கொண்டன. இது எவ்வாறு நிகழ்கின்றது என்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்

16 சித்திரை, 2007