மென்பொருள்

ரொரென்ற் கோப்பை Firefox ஆல் தரவிறக்குங்கள்

சாதாரணமாக நாங்கள் கோப்பொன்றினை இணையத்தில் இருந்து தரவிறக்க இணைய உலாவியே போதுமானது. ஆனால் ரொரென்ற் கோப்பொன்றினை தரவிறக்குவதாயின் Torrent client ஒன்று தேவைப்படும்.

fireaddon

தினமும் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபவர்கள் இதற்கென ஒரு மென்பொருளை வைத்திருக்க முடியும். ஆனால் ஏப்போதாவதுதான் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபர்களுக்கு ஒரு மென்பொருளை வைத்திருப்பது வீண் சுமையாத்தான் முடியும்.

firetorrent

இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் Firetorrent நீட்சி. இதனை நீங்கள் உங்கள் Firefox உலாவியில் நிறுவிக்கொண்டால் சாதாரணமாக ஒரு கோப்பை தரவிறக்குவது போல ரொரென்ற் கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ள முடியும். இது இன்னமும் அல்பா பதிப்பிலேயே இருந்தாலும் மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது.

இங்கே வந்து நீட்சியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

31 மார்கழி, 2008

Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.

Internet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர்.

safari

இது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றது.

இதனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு தயவு செய்து உங்கள் இணைய உலாவியை மேம்படுத்தி கொள்ளுங்கள் அல்லது வேறு இணைய உலாவிக்கு மாறிக்கொள்ளுங்கள்.

1. PC World சஞ்சிகை Internet Explorer 6 இனை உலகின் மிகமோசமான தொழிநுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் 8 வது இடத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றது.

2. இந்த மென்பொருள் ஏழு வருடங்கள் பழமை வாய்ந்தது. இணைய உலகின் அளவுத்திட்டங்கள் மற்றும் கால அளவிடைகளுடன் இதனை ஒப்பிடுவதாயின், இது கற்காலத்தை சேர்ந்த ஒரு மென்பொருள்.

3. IE6 வழுக்களின் சொர்க்கபுரி. இதனை தயாரித்தவர்களே (Micorsoft) இதுபற்றி கவனம் செலுத்தாதபோது நாங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

4. Internet Explorer இன் புதிய பதிப்புகள் (பதிப்பு 8 வரை) இப்போது கிடைக்கின்றது.

5. IE 6 இணைய பக்கங்களை render செய்ய தனது சொந்த முறையினை பயன்படுத்துகின்றது. இது இணைய வடிவமைப்பாளர்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கின்றது.

6. IE6 இலுள்ள CSS rendering மிக மோசமானது. (உண்மையை சொல்வதானால் IE 6 CSS என்ற மொழியை txt கோப்பாகவே render செய்கிறது)

7. வேறு ஒரு இணைய உலாவிக்கு மாற அல்லது IE 6 இனை மேம்படுத்த உங்களுக்கு இரண்டு நிமிடமளவிலேயே நேரம் செலவாகும்.

30 மார்கழி, 2008

Adobe AIR இனி லினிக்ஸிலும்.

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்.

Adobe AIR

உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும்.

இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பின்னர்
sudo ./AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு என்ரர் செய்யுங்கள். இது பயனளிக்காவிடின் இதற்கு முன்னர்
sudo chmod 755 AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு கொள்ளுங்கள்.

19 மார்கழி, 2008