Posts Tagged "வரதர்"

வரதர் ஐயா காலமானார்

ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார். கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் ...

மேலும் வாசிக்க →

வரதர் ஐயாவின் புதிய முயற்சி

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது. அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு ...

மேலும் வாசிக்க →

வரதர்

ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே. வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. ...

மேலும் வாசிக்க →