Posts Tagged "Google"

கூகிள் மேலதிக வசதிகள்

இணையத்தில் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி அறிந்து கொள்ளவேண்டுமாயின் எங்களில் அனேகர் உடன் செல்வது கூகளின் தேடுபொறிக்கே. இத்தேடுபொறி தேடுதல் தவிர ஆனேக மேலதிக வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் சிலவற்றினை கீழே பார்ப்போம்.

நீங்கள் கூகிளை ஒரு பல் வசதி கொண்ட இணையக்கணிப்பானாய் பயன்படுத்த முடியும். உங்கள் சமன்பாட்டை கூகிளின் தேடுபெட்டியினில் உள்ளிட்டுவிட்டு தேடு பொத்தானை அழுத்தினால் அதற்கான விடையை கூகிள் உங்களுக்கு தரும். உதாரணமாக 2+3 என உள்ளிட்டு தேடினால் 5 என விடை வரும். இப்படியான சாதாரண கணக்குகள் மட்டுமன்றி திரிகோணகணிதம் போன்ற கடின கணக்குகளையும் தீர்க்கும்.

கூகிளில் நாங்கள் சமன்பாடுகளை உள்ளிடும் போது கணித விஞ்ஞான மாறிலிகளை பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு pi என உள்ளிட்டு தேடினால் 3.14159265 எனவும் speed of light என உள்ளிட்டால் 299792458 m/s என விடைகளை தரும்.

கூகிளால் ஒரு அளவீட்டில் இருக்கும் ஒரு பெறுமானத்தை இன்னொரு அளவீட்டுக்கு மாற்ற முடியும்.
உதாரணமாக 1 meter in feet, 1 cup in teaspoons மற்றும் 100 usd in euros போன்றவற்றை உள்ளிட்டு தேடிப்பாருங்கள்.

கூகிளை ஒரு அகராதியாக பயன்படுத்த முடியும். உதாரணமாக நீங்கள் defenestrate என்ற சொல்லின் அர்த்தத்தினை அறிய வேண்டுமாயின் what is defenestrate என உள்ளிட்டு தேடுங்கள் அவ்வளவுதான்.
ஏதாவது ஒரு சொல்லின் வரைவிலக்கணத்தை அறியவும் நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக defenestrate என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை அறிய define:defenestrate என உள்ளிட்டு தேடுங்கள். peer to peer இன் வரைவிலக்கணத்தை அறிய வேண்டுமாயின் define:”peer to peer” என உள்ளிட்டு
தேடுங்கள் அவ்வளவுதான். உங்களுக்கு இப்போது வரைவிலக்கணம் தெரிந்திருக்கும்.

சில குறிப்பிட்ட விடயங்களை அறிந்துகொள்ள நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக president germany என உள்ளிட்டு தேடினால் எங்களுக்கு தேவையான பதில் உடனே கிடைத்துவிடும்.

இதைவிட ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் செல்லுபடியாகும் பல வசதிகள் கூகிளில் உண்டு. தேவையெனில் அவற்றை வேறொரு பதிவில் பார்ப்போம். உங்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக பட்டால் எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுவிடுங்கள்

21 மார்கழி, 2006

கூகிளின் முதற்பக்கம்

இன்று இணையத்தை பற்றி தெரியாதவர்கள் கூட கூகிளைப்பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். கூகிள் தன் சேவைப்பரப்பை காலத்துக்கு காலம் விஸ்தரித்துக்கொண்டே வருகின்றது. இப்பொழுது google என்ற சொல் கூட ஒரு வினைச்சொல்லாக அகராதிகளில் புகுந்துவிட்டது. கூகிள் இணையரீதியான வாழ்க்கைக்கு மக்களை வழிப்படுத்தி வருகின்றது. இணையவசதிகள் மிகக்குறைந்தளவே இருக்கின்ற நான்கூட எனது அனேகமான கூகிளின் அனேக சேவைகளை பயன்படுத்திவருகின்றேன். (Gmail, Blogger, Google search, Google webalbums with Picasa, Google docs & Spreadsheet, youtube, Google earth மற்றும் சிறிதளவில் Googel checkout மற்றும் பிறசேவைகள்). கூகிள் 2006 இன் சிறந்த நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது (இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளவை முறையே அப்பிள் கொம்பியூற்றேர்ஸ், யாகூ, மைக்ரோசொவ்ற்). மிக அண்மையில்(திசம்பர் 2006) கூட NASA நிறுவனத்துடன் கூகிள் தனது சேவைகளை விஸ்தரிக்கும் முகமாக ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. காலத்துக்கு காலம் தனது சேவைகளில் தேவையற்றவை என கருதப்படுவதை நிறுத்தியும் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் பாவனையாளர்களிடையே மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆரம்பகால முகப்புபக்கம் கீழே. ஆரம்ப கால பயனாளர்கள் இதனை பார்த்திருக்ககூடும். பார்க்காதவர்களுக்காக. பாத்திட்டு அப்பிடியே எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

20 மார்கழி, 2006

விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா

இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)



மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

20 மார்கழி, 2006