Posts Tagged "Google"

விக்கிபீடியா தேடுபொறி

Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.

முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.

6 வைகாசி, 2007

யப்பான் சிறுவர் தினம்

கூகிள் யப்பான், யப்பானின் சிறுவர் தினத்திற்காக கூகிள் யப்பான் பக்கத்தில் வெளியிட்ட சின்னத்தை பாருங்கள். யப்பானில் சிறுவர் தினம் மே 5 இல் வருகிறது. அப்படியே முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சின்னங்களையும் பாருங்கள்.

2007

2006


2005


2004


2003

6 வைகாசி, 2007

Google Notebook

கூகிள் நிறுவனம் தனது நோட்புக்கில் பயன்படுத்த இலகுவானதாக சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் முதற்பக்கம் பூராகவும் AJAX இல் மீள வடிவமைக்கப்பட்டு சில வசதிகளும் மேலதிகமாக செய்யப்பட்டுள்ளன. இதனால் இதனை மிக வேகமாக பயன்படுத்த முடிவதுடன் இலகுவாக கையாளவும் முடிகிறது. அத்துடன் கூகிள் நோட்புக்கில் எடுக்கப்பட்ட குறிப்பொன்றினை Google docs இற்கு இலகுவாக அனுப்பவும் முடிகின்றது.

கூகிள் நோட்புக் (புதியது)

கூகிள் நோட்புக் (பழையது)

31 பங்குனி, 2007