ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊரோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க →தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊரோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க →அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம். பேசாமல் இருப்பதன் மூலம் சொற்களின் எல்லையை மௌனத்தை எட்டிப்பிடிக்கின்றேன். பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான். இந்த அழகிய பூக்களிடையே ஒரு மரங்கொத்தி ...
மேலும் வாசிக்க →இந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே "மக்றோமீடியா பிளாஸ்" பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் "வியூச்சர் பிளான்" எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ...
மேலும் வாசிக்க →இது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன். இப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ ...
மேலும் வாசிக்க →ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் ...
மேலும் வாசிக்க →